ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் இணை உரிமையாளராக ராஹூல் சூட் இணைவு.

  • November 20, 2020
  • 177
  • Aroos Samsudeen
ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் இணை உரிமையாளராக ராஹூல் சூட் இணைவு.

(எஸ்.எம்.அறூஸ்)

Microsoft Ventures நிறுவனத்தின் நிறுவுனரும், அமெரிக்காவின் Seattle மாநிலத்தை
தளமாகக் கொண்டியங்கும் தொழில்முனைவருமான Rahul Sood, Lanka Premier League
(LPL) போட்டிகளில் கலந்து கொள்ளும் Jaffna Stallions அணியின் உரிமையாளர்களில்
ஓருவராக இணைந்துள்ளார்.

Jaffna Stallions அணியின் வளர்ச்சியிலும் சர்வதேச ரீதியாக அதனைப்
பிரபலப்படுத்துவதிலும் Rahul Sood முக்கிய பங்காற்றுவார்.

“Jaffna Stallions அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவராக Rahul Soodஐ
வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம். சர்வதேச வர்த்தகத்திலும், புதிய தொழில்
முயற்சிகள் ஆரம்பிப்பதிலும் அவருக்கு இருக்கும் அனுபவம் எங்களிற்கு பயனுள்ளதாக
இருக்கும். எங்களது அணியை சர்வதேச ரீதியாக பிரபலப்படுத்துவதிலும் அதன்
வளர்ச்சியிலும் Rahul Sood அளப்பரிய பங்காற்றுவார்” என்றார் Jaffna Stallions
அணியின் பிரதம மூலோபாய அதிகாரியான (Chief Strategy Officer) ஆனந்தன்
ஆர்னல்ட்.

“உலகின் பிரபலமான விளையாட்டுக்களில் ஒன்றாக கிரிக்கெட் திகழ்கிறது. IPL
போட்டிகளிற்கு உலகமெங்கும் ரசிகர்கள் உள்ளார்கள். ஆதலால் இலங்கையில் LPL
போட்டிகள் ஆரம்பமாவதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இலங்கையில் கிரிக்கெட்
மிகவும் பிரபலமாக உள்ளது, LPLன் ஆரம்பமானது இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் ஓரு
முக்கியமான நிகழ்வு” என்றார் Rahul Sood.

“LPL போட்டிகளில் பங்கேற்கும் Jaffna Stallions அணியின் இணை உரிமையாளராக
இணைவதில் நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன்” என்று Rahul Sood மேலும் தெரிவித்தார்.

Jaffna Stallions
Jaffna Stallions என்பது இலங்கையில் இடம்பெறும் Lanka Premier League (LPL)
போட்டிகளில் கலந்து கொள்ளும் ஒரு உரிமைத்துவ (Franchise) கிரிக்கெட் அணி. JaffnaStallions அணியின் உரிமையாளர்களாக, இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து UK,
Canada, Australiaவில் வதியும் 12 கிரிக்கெட் ஆர்வலர்கள் விளங்குகிறார்கள்.

Jaffna Stallions அணியின் முதன்மை பயிற்றுவிப்பாளராக Thilina Kandambyயும்,
அணியின் தலைவராக Thisara Perera கடமையாற்றுவார்கள்; இவர்கள் இருவரும்
இலங்கை கிரிக்கெட் அணிக்கு சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய அனுபவமுள்ள
கிரிக்கெட் வீரர்கள் ஆவார்கள்.

Jaffna Stallions அணியில் அங்கம் வகிக்கும் 20 கிரிக்கெட் வீரர்களில் பதினான்கு
உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களும் ஆறு சர்வதேச கிரிக்கெட் வீரர்களும் அடங்குவர்.

Tags :
comments