இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது சிராஜின் தந்தை காலமானார்.

  • November 20, 2020
  • 199
  • Aroos Samsudeen
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது சிராஜின் தந்தை காலமானார்.

(எஸ்.எம்.அறூஸ்)

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது சிராஜின் தந்தை முகமது கௌஸ் 53 வயதில் இன்று ஹைதராபாத்தில் காலமானார். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்
நுரையீரல் நோயினால் நீண்டகாலமாக அவஸ்தைப்பட்டு வந்த சிராஜின் தந்தை முகமது கௌஸ் ஹைதராபாத் மருத்துவமனையில் இன்று காலமானார்.

ஆட்டோ சாரதியான முகம்மது கௌஸ் தனது மகன் முகம்மது சிராஜ் சன்றைஸ் ஹைதராபாத் அணிக்கும், அதேபோன்று இந்திய கிரிக்கெட் அணிக்கும் தெரிவு செய்யப்பட்டதும் மிகவும் மகிழ்ச்சியடைந்தவர் முகம்மது கௌசாகும்

அண்மையில் நிறைவு பெற்ற ஐ.பி.எல். போட்டிகளில் ஆர்.சி.பி அணிக்காக களமிறங்கி மிகச்சிறப்பாக பந்துவீசி பலரது கவனத்தையும் முகம்மது சிராஜ் பெற்றிருந்தார்.அத்தோடு தொடர்ச்சியாக இரண்டு ஓவர்களை ஓட்டமற்ற ஓவர்களாக பந்துவீசிய சாதனையையும் ஏற்படுத்தியிருந்தார்.

பல்வேறு கஸ்டங்களையும், தடைகளையும் எதிர்கொண்டு தனது மகனை நாட்டின் தேசிய அணியில் கிரிக்கெட் விளையாடும் அளவிற்கு உருவாக்கிய ஒருவரின் இழப்பு என்பது முகம்மது சிராஜூக்கு பெரும் இழப்பாகும்.

Tags :
comments