வெளிநாட்டில் பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குமாறு கோரிக்கை

  • November 22, 2020
  • 103
  • Aroos Samsudeen
வெளிநாட்டில் பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குமாறு கோரிக்கை

அரசாங்கத்தினால், பட்டதாரிகளுக்கு பயிலுனர் பட்டதாரி நியமனம் வழங்கும் செயற்திட்டத்தில், வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்றிருந்த பட்டதாரிகளுக்கு நியனக் கடிதம் வழங்கப்பட்டும் அது இடைநிறுத்தப்பட்டு, அநீதி இழைக்கப்பட்டுள்மையானது கண்டிக்கத்தக்க விடயமாகும் என இலங்கை வெளிநாட்டு பட்டதாரிகள் ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளனர்.

இலங்கை வெளிநாட்டுப் பல்கலைக் கழக பட்டதாரிகள் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று(22) அட்டாளைச்சேனை கூட்டுறவு சங்க கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போதே இலங்கை வெளிநாட்டுப் பல்கலைக் கழக பட்டதாரிகள் ஒன்றியத்தின் பிரதித் தலைவர் ஏ.ஜி. கபீர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்ஊடகவியலாளர் சந்திப்பில் வெளிநாட்டுப் பல்கலைக் கழக பட்டதாரிகள் ஒன்றியத்தின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தனர்.

நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வெளிநாட்டுப் பல்கலைக் கழக பட்டதாரிகள் விடயத்தில் கவனம் எடுத்து மிக விரைவாக எமக்கான நியமனத்தை வழங்க வேண்டும் எனவும் இங்கு வேண்டுகோள் விடுத்தனர்.

Tags :
comments