மஹிந்த ராஜபக்ஸ மைதானத்தில் பயிற்சியை ஆரம்பித்தது ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி

  • November 24, 2020
  • 149
  • Aroos Samsudeen
மஹிந்த ராஜபக்ஸ மைதானத்தில் பயிற்சியை ஆரம்பித்தது ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி

(எஸ்.எம்.அறூஸ்)

லங்கா பிறிமியர் லீக்கில் விளையாடும் ஐந்து அணிகளில் ஒன்றான ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியினர் நேற்றிரவு ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சிகளில் ஈடுபட்டனர்.

லங்கா பிறிமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் நாளை மறுதினம் ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் காலி க்ளேடியேட்டர்ஸ் அணியுடன் மோதவுள்ளது.

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரா் திலிண கண்டம்பி செயற்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரா் ஹேமாங் பதானி ஆலோசகராகவும், இலங்கையின் முதல்தர கிரிக்கெட் வீரரும், பங்களாதேஸ் தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் உடற்கூறு பயிற்சியாளருமான மாரியோ வில்லவராயன் பயிற்சியாளர் மற்றும் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராகவும், இலங்கை அணியின் முன்னாள் சுழல்பந்துவீச்சாளரான சச்சித் பத்திரன சுழல் பந்துவீச்சு பயிற்சியாளராகவும், விமுக்தி தேசபிரிய களத்தடுப்பு பயிற்சியாளராகவும் செயற்படுகின்றனர்.

Tags :
comments