(எஸ்.எம்.அறூஸ்)
அம்பாறை மாவட்டத்தில் சமுர்த்தி வங்கிகளை கணனி மயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை சமூர்த்தி வங்கியின் செயற்பாடுகளை கணனி மயப்படுத்தும் நடவடிக்கைகள் 95 வீதம் நிறைவடைந்துள்ளதாகவும் விரைவில் ஒன்லைன் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் உதவி முகாமையாளர் எம்.ஏ.எல்.எம்.றிஸ்வான் தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் எம்.எல்.ஜாபீர் தலமையில் வங்கி உத்தியோகத்தர்கள், பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கணனி மயப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த காலங்களில் சமுர்த்தி பயனாளிகள் பல சிரமங்களை எதிர்நோக்கிய போதிலும் எதிர்வரும் வருடத்தில் .இருந்து எனைய வங்கிகள் போன்று நடைமுறையை மேற்கொள்ள வசதி ஏற்படவுள்ளதாகவும் வங்கியின் உதவி முகாமையாளர் எம்.ஏ.எல்.எம்.றிஸ்வான் மேலும் தெரிவித்தார்.
சமுர்த்தி வங்கியை கணனி மயப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பினையும், ஆலோசனைகளையும் பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் ஆகியோர் வழங்கி வருகின்றனர்.