ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக ஆனந்தன் ஆர்னல்ட் நியமனம்

  • November 27, 2020
  • 152
  • Aroos Samsudeen
ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக ஆனந்தன் ஆர்னல்ட் நியமனம்

லங்கா பிறிமியர் லீக் (LPL) போட்டிகளில் பங்குபற்றும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின்
பிரதம நிறைவேற்று அதிகாரியாக (Chief Executive Officer, CEO) ஆனந்தன் ஆர்னல்ட்
நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பிறந்த ஆனந்தன் ஆர்னல்ட் தற்பொழுது இங்கிலாந்தில் BBK
Partnership என்ற பட்டயக் கணக்காளர் (Chartered Accountants) நிறுவனத்தில் மூத்த
பங்காளராக (Senior Partner) பணியாற்றி வருகிறார்.

கிரிக்கெட் ஆர்வலரான ஆனந்தன் ஆர்னல்ட் யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியின்
பழைய மாணவராவார்.

சைக்கிளோட்டத்தில் ஈடுபடும் ஆனந்தன், கடந்த நான்கு வருடங்களாக மானிப்பாய்
Green Hospital அபிவிருத்திக்காக, “Ride for Ceylon” எனும் 481 கிமி தூரமுள்ள
கொழும்பிலிருந்து மானிப்பாய்க்கான நிதி சேகரிப்பு முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அத்துடன், ஜப்னா ஸ்டாலியன்ஸ் நிறுவனத்தின் கிரிக்கெட் அபிவிருத்திக்கான உப-அதிபராக (
Vice President – Cricket Development) பிருந்தன் பகிரதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரது நியமனம், யாழ்பாணத்தையும் அதைச் சூழவுள்ள பகுதிகளிலும் கிரிக்கெட்
விளையாட்டை அபிவிருத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Tags :
comments