ஜப்னா ஸ்டாலியன்ஸ் கிண்ணத்தை வெற்றி கொண்டது

  • December 17, 2020
  • 136
  • Aroos Samsudeen
ஜப்னா ஸ்டாலியன்ஸ் கிண்ணத்தை வெற்றி கொண்டது

லங்கா பிரிமியர் லீக் இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் இறுதிப் போட்டி நேற்றிரவு ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது.

இறுதி போட்டியில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் மற்றும் காலி க்ளேடியேட்டர்ஸ் அணிகள் மோதி இருந்தன.  ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இறுதி போட்டியில் அபார வெற்றி பெற்றுள்ளது. வெற்றிக்கிண்ணத்தை இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, அணித்தலைவர் திஸேர பெரேராவிடம் வழங்கிவைத்தார்.

Tags :
comments