”ராவய ” பத்திரிகையை கடந்த 25 வருடகாலமாக சிரேஸ்ட ஊடகவியாலாளா் விக்டா ஜய்வன் அவா்களினால் ஆரம்பிக்கப்பட்ட து. சிங்கள மக்கள் பெரிதும் விரும்பி வாசிக்கும் இப் பத்திரிகையில் இவ் வார 20.12.2020 திகதிய வெளியீடான ராவய பத்திரிகையில் ” 4 முழுப் பக்கங்களை முஸ்லிம்களுக்கான கட்டுரைகளை வரைந்துள்ளது. அக் கட்டுரைகளில் முஸ்லிம்களது நியாயங்களை பல்வேறு தலைப்புக்களில் வெளியிட்டுள்ளது.
முஸ்லிம்கள் இந்த நாட்டில் பிறந்தவா்கள் அவா்களது உடல்கள் இந்த நாட்டிலேயே அடக்கம் செய்யப்படல் வேண்டும், முஸ்லிம்கள் கள்ளத் தோனிகள் அல்ல, என்ற கட்டுரையை ஊடகவியலாளா் ரசிக்க குணவா்த்தன எழுதியுள்ளாா்.
2வது கட்டுரையை ஜயந்த உயன்கொட அவா்களினால் ” முஸ்லிம் மக்களது துயரமும் அவா்களது வேதனைகளும்
” 3வது கட்டுரை ”கொவிட்19 இறக்கும் முஸ்லிம்கள் அடக்கம் செய்யப்படல்வேண்டும் அவா்களது உடல்கள் எரிக்கக் கூடாது. என, பலரது கருத்துக்கள் அடங்கிய கட்டுரையில் அலிசப்றி, அலி ஸாகிா் மௌலானா, ரீ.என்.ஏ பாராளுமன்ற உறுப்பிணா் சனாக்கியன், இலங்கை மாலைதீவு ஜக்கிய நாடுகள் பிரநிதி, பேராசிரியா் மலிக் பீரிஸ், பேராசிரியா் பலிகடவன ஆகியோா்களது டுவிட்டா் முகநுால் கருத்துக்களை அடங்கிய கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.