ஜனாசாக்களை எரிப்பது பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும் – அநுரகுமார

  • December 23, 2020
  • 124
  • Aroos Samsudeen
ஜனாசாக்களை எரிப்பது பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும் – அநுரகுமார

(எம்.மனோசித்ரா)

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கின்ற முஸ்லிம் மக்களின் ஜனாசாக்கள் விவகாரத்தில் அரசாங்கம் அரசியல் ரீதியிலான பிரவேசரத்தை துரிதமாக கைவிட்டு , விஞ்ஞான சுகாதார தொழிநுட்ப ரீதியில் அதனை அனுக வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி தலைமை அலுவலகத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

முஸ்லிம் ஜனாசாக்களின் விவகாரத்தில் அரசியல் ரீதியாக அனுகாமல் விஞ்ஞான சுகாதார தொழிநுட்ப ரீதியில் அனுக வேண்டும். இது அரசியல் வாதிகளால் தீர்மானிக்கப்படக் கூடிய விவகாரம் அல்ல. கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதால் எவ்வித பாதிப்பும் இல்லை என்று சுகாதார தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர். எனவே இவ்விடயத்தை வைத்து அரசியலில் ஈடுபடுவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்விவகாரத்தில் அரசாங்கம் உடனடியாக அரசியல் பிரவேசத்தை கைவிட வேண்டும். இது வரையில் சுகாதார தரப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்கள் போதாதென்றால் , மேலும் பலரது நிலைப்பாடுகளையும் பெற்று உரிய தீர்மானத்தை எடுக்க வேண்டும். அவ்வாறில்லை என்றால் இவ்விடயம் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும். இதனை அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர் அலி சப்ரியும் தெரிவித்துள்ளார்.

Tags :
comments