ஜமாலியா கிராமம் முடக்கம் – வெறிச்சோடியது பிரதேசம்

  • December 23, 2020
  • 136
  • Aroos Samsudeen
ஜமாலியா கிராமம் முடக்கம் – வெறிச்சோடியது பிரதேசம்

– ஏ.எல்.றபாய்தீன்பாபு –

திருகோணமலை நகரில் பெரும்பான்மை முஸ்லிம் குடிமனைகள் வாழும் ஜமாலியா தக்வா நகர் துளசிபுரம்  லவ்லேன் I, லவ் லேன் 2 ஆகிய கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான வறிய குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்  அடை மழை பெய்கிறது கடல் கொந்தளிப்புடன்  குளிர் காற்று வீசுகிறது .இதனால் கரையோர  மீனவக்கிராம மக்கள் வாழ்வாதாரத்தை இளந்துள்ளனர். ஜமாலியா கிராமம் வெறிச்சோடிக் காணப்படுகிறது

தனிமைப்படுத்தல் தொடருமானால் நிலமை மோசமடையக் கூடும். பேலியகொடை மீன் சந்தை கொத்தனிக்குப் பிற்பாடு திருகோணமலை மாவட்டத்தில் நீண்ட நாட்களாக மிகவும் குறைந்த எண்ணிக்கையில் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றானது கடந்த ஓரிரண்டு நாட்களாக சடுதியாக அதிகரிக்கின்றன.

அனேகமான தொற்றுக்கள் வெளி மாவட்டங்களிலிருந்து வருகின்றவர்கள் தான் இந்நோயை காவி கொண்டு வருகின்றனர் . திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிலுள்ள ஜமாலியா பிரதேசத்தில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது  இறைச்சிக் கடையில் இருக்கின்ற ஒரு நபர் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் சில பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதன் போது தொற்று அவருக்கு உறுதி செய்யப்பட்டது. ஆரம்பத்தில் 15 நபர்கள் இனங்காணப்பட்டதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அழகையா லதாகரன் ஊடக சந்திப்பொன்றில் இதனைத்  தெரிவித்தார்.

இத்தொற்றானது தற்பொழது   இதர பகுதிகளுக்கும் வியாபித்து வருகிறது பல நூற்றுக்கணக்கான பிசிஆர் பரிசோதனைகள் ஆன்டிஜன் பரிசோதனைகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. சடுதியாக குறிப்பிட்ட பகுதியில் இத்தொற்று உருவாகிய காரணத்தினால் முருகா புரி ஜின்னா நகர் அபய புர ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளன.

இத்தொற்றானது இதரபகுதிகளுக்கும் பரவாமல் இருப்பதற்கு திருகோணமலை வாழ் மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென சுகாதார பணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கும் தொற்று இனங்காணப்பட்டுள்ளதால் ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் . கிரிஸ்மஸ் விடுமுறை வருகிறது இக்காலங்களில் மக்கள் ஒருமித்து ஒன்று கூடுவார்கள் விடுமுறையைக் கழிப்பதற்காக திருகோணமலையை நாடி மக்கள் வரக்கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.அப்படி ஏற்படும் பட்சத்தில் அவர்களாகவோ அல்லது அறிந்த நபர்களோ அருகிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரிக்கு அறிவிக்க வேண்டும் என சுகாதார பணிப்பாளர் மேலும் கேட்டுக் கொண்டார்.

சுகாதாரப் பிரிவு எமது பக்கம் 40 வீதமான பங்களிப்புதான் உள்ளது மிகுதி 60 வீதமான பங்களிப்பு மக்களின் கைகளில் தான் தங்கியுள்ளது சுகாதார வழிமுறைகளை மிகவும் காத்திரமாகவும் பொறுப்புணர்ச்சியுடனும் அணைவரும் கடைப்பிடித்து சுகாதார பிரிவினருக்கு ஒத்துழைப்பு தந்து இந்த செயல் திட்டங்களை முன்னெடுக்கும் பட்சத்தில் எமது மாவட்டத்தில் இந்நோயைக் கட்டுப்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்

Tags :
comments