அரசாங்கத்தின் வரவுசெலவு திட்ட பிரதிபலனை நாட்டுமக்கள் ஜனவரி முதல் பெற்றுக் கொள்வார்கள் – பசில்

  • December 23, 2020
  • 105
  • Aroos Samsudeen
அரசாங்கத்தின் வரவுசெலவு திட்ட பிரதிபலனை நாட்டுமக்கள் ஜனவரி முதல் பெற்றுக் கொள்வார்கள் – பசில்

(இராஜதுரை ஹஷான்)

தேசிய பொருளாதாரத்தின் கேந்திர மையமாக மேல்மாகாணம் அபிவிருத்தி செய்யப்படும். 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தின் பிரதிபலனை நாட்டு மக்கள் எதிர்வரும் ஜனவரி மாதம்  முதல் பெற்றுக் கொள்வார்கள் என பொருளாதார புத்தாக்கம் மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின்  தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற மேல்மாகாண சபை கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையில் இதனைக் கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில் ,

மக்களின் சுய முன்னேற்றத்தை மையப்படுத்தி ‘கமசமக பிலிசதர’ செயற்திட்டம் தயாரிக்கப்பட்டு அதன் கூட்டங்கள் நாடு தழுவிய மட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றன. மக்களின் அபிலாசைகளை கொண்டு 2021 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

வரவு செலவு திட்டத்தின் பிரதிபலனை நாட்டு மக்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் பெற்றுக் கொள்வார்கள். போதைப்பொருள் ஒழிப்புக்கு இம்முறை வரவு- செலவு திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டுக்குள் கொண்டு வரும் போதைப்பொருளை கட்டுப்படுத்த முப்படையினரும்,பொலிஸாரும் பொறுப்புடன் செயற்படுகின்றனர்.

பாடசாலைக மாணவர்களை  இலக்காக கொண்டு முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிக்கவும், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கவும் புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மேல்மாகாணம் நெருக்கடிக்குள்ளானால் முழு நாடும் பாதிக்கப்படும்.

பேலியகொட மீன்பிடி சம்பவம் முழு நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேல்மாகாணத்தை பொருளாதாரம் கேந்திர  மையமாக பலப்படுத்தப்படும்.மேல்மாகாணம் இன்னும் குறுகிய காலத்தில் அபிவிருத்தி செய்யப்படும் என்றார்.

Tags :
comments