இலங்கையில் ஜனாஸா எரிப்பு, இம்ரான் கானும் கவனத்தை குவிக்கிறார் – இன்று எதிர்க்கட்சியுடன் பேச்சு

  • December 25, 2020
  • 513
  • Aroos Samsudeen
இலங்கையில் ஜனாஸா எரிப்பு, இம்ரான் கானும் கவனத்தை குவிக்கிறார் – இன்று எதிர்க்கட்சியுடன் பேச்சு
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இலங்கையில் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் பலாத்காரமாக எரிக்கப்படும் விவகாரத்தில், தனது கவனத்தை குவித்திருப்பதாக அரசியல் மற்றும் ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்தது.

நேற்று வியாழக்கிழமை (24) கொழும்பில் உள்ள ராஜதந்திரிகள் சிலர், இலங்கையில் ஜனாஸா எரிப்பு விவகாரத்தை, ஏற்கனவே பாகிஸ்தான் நாட்டு பிரதமருக்கு அறிவித்து விட்டதாக முஸ்லிம் சமூகம் சார்பு பிரதிநிதிகள் சிலரிடம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த ராஜதந்திரிகள், இலங்கையில் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் பலாத்காரமாக எரிக்கப்படுவதற்கு எதிராக, தமது ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டுள்ளனர்.

இவற்றுக்கு மேலதிகமாக, பாகிஸ்தான் நாட்டின் எதிர்கட்சி பிரதிநிதிகளும், இலங்கையில் பலாத்கார ஜனாஸா எரிப்பு விவகாரத்தை, இம்ரான் கானின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனர். இதுபற்றி அவருடன் நேரடியாக பேச்சு நடத்தவும் அனுமதி கோரியிருந்தனர்.

அதனடிப்படையில் இன்று வெள்ளிக்கிழமை (25) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும், அந்நாட்டு எதிர்க்கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையில், இலங்கையில் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் பலாத்காரமாக எரிக்கப்படுதல், அதனை தடுத்து நிறுத்த அழுத்தம் பிரயோகித்தல் ஆகிய விடயங்களில், பேச்சு நடத்தப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தகவலை  கொழும்பில்  உள்ள ராஜதந்திர, அரசியல், சமூக வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

Tags :
comments