ஜனாஸா எரிப்பை கண்டித்து இன்று, பல இடங்களிலும் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

  • December 25, 2020
  • 137
  • Aroos Samsudeen
ஜனாஸா எரிப்பை கண்டித்து இன்று, பல இடங்களிலும் ஆர்ப்பாட்டம் (படங்கள்)
(ஏ.பி.எம்.அஸ்ஹர் எம்.எம்.ஜெஸ்மின்)
கொவிட் 19 வைரஸ் தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதைக்கண்டித்து இன்று (25) அம்பாரை மாவட்டத்தில் பல பிரதேசங்களிலும் கவன ஈர்ப்புப்போராட்டங்கள் இடம் பெற்றன. ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதை கண்டித்து கல்முனையில் ஐக்கிய மக்கள் சக்தியின் கல்முனைத்தொகுதி அமைப்பாளரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம். எஸ் அப்துர் ரஸ்ஸாக்  தலைமையில் இடம்பெற்ற அமைதி ஆர்ப்பாட்டத்தின் போது அரசியல் கட்சி வேறு பாடுகளின்றி நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர்

இதே வேளை ஒலிவில் ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாகவும் ஜனாசாக்களை வலுக்கட்டாயமாக எரிக்கும்  ஆட்சியாளர்களுக்கு எதிரான கண்டன பேரணியொன்றும் இடம் பெற்றது.

அத்துடன் வெள்ளைத்துணி அமைதிப்போராட்டம்   ஒன்று நற்பிட்டிமுனையிலும் இன்று இடம் பெற்றது.

 

Tags :
comments