அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் புதுவருட சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு

  • January 1, 2021
  • 136
  • Aroos Samsudeen
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் புதுவருட சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு

(எஸ்.எம்.அறூஸ்,ஏ.பி.எம்.அஸ்ஹர்)

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் 2021ம் ஆண்டு புதுவருட பிறப்பின் முதல் நாளில் அரச உத்தியோகத்தர்கள் கடமை சத்திய பிரமாணம் செய்யும் நிகழ்வு பிரதேச செயலகத்தின் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அஹமட் நஸீல், நிருவாக உத்தியோகத்தர் ஆர்.எம்.நழீல், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஹூசைன்தீன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது நாட்டின் தேசிய கொடியை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி ஏற்றிவைத்ததுடன், நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்தோடு 2021ம் ஆண்டு புது வருடப்பிறப்பின் முதல் நாளில் அரச உத்தியோகத்தர்கள் கடமை தொடர்பிலான சத்தியப்பிரமாணம் செய்யப்பட்டது.

Tags :
comments