அரசாங்கத்தில் உள்ள சில குழுவினர் இனவாதத்தை தூண்டுகின்றனர், முஸ்லீம்களின் நம்பிக்கையை மதியுங்கள் – அனுரகுமார

  • January 9, 2021
  • 90
  • Aroos Samsudeen
அரசாங்கத்தில் உள்ள சில குழுவினர் இனவாதத்தை தூண்டுகின்றனர், முஸ்லீம்களின் நம்பிக்கையை மதியுங்கள் – அனுரகுமார
முஸ்லீம் மக்களின் நம்பிக்கைகளை மதிக்கவேண்டும் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனாவைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கையாள்வது குறித்து விஞ்ஞான ரீதியிலான அணுகுமுறையை பின்பற்றவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர், முஸ்லீம் சமூகத்தின் நம்பிக்கைகளை மதிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லீம் மக்களின் நம்பிக்கைகளை மதிக்கதவறினால் மதரீதியிலான அமைதியின்மை உருவாகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் உள்ள சில குழுவினர் இனவாதத்தை தூண்டுகின்றனர் என தெரிவித்துள்ள ஜேவிபியின் தலைவர் அதனால் நீண்ட காலத்திற்கு ஐக்கியமின்மை ஏற்படலாம் என தெரிவித்துள்ளதுடன் அரசாங்கம் அதனை தடுத்து நிறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மிகமுக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காக இலங்கையின் ஆட்சியாளாகள் இனவாதத்தினை பரப்பி வந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ள அவர் மாவனல்லையில் புத்தர் சிலை மீது கல்வீசப்பட்ட சம்பவத்தினை பயனபடுத்தி இனவெறியை தூண்ட முயற்சி இடம்பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்

Tags :
comments