கொரோனாக்கு மத்தியில் மக்களுக்காக மேற்கொள்ளும், அபிவிருத்தி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் – பிரதமர்

  • January 13, 2021
  • 87
  • Aroos Samsudeen
கொரோனாக்கு மத்தியில் மக்களுக்காக மேற்கொள்ளும், அபிவிருத்தி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் – பிரதமர்
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார பிரிவின் வேலைத்திட்டத்திற்கு மக்களின் ஆதரவு கிடைக்கின்றது. சிலர் குறைப்பாடுகளை தேடி அந்த வேலைத்திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகின்றனர்.

தற்போதுள்ள கொரோனா நிலைமைக்கு மத்தியில் அரசாங்கம் மக்களுக்காக மேற்கொள்ளும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

அரசில்வாதிகளுக்கு கொரோனா தொற்றியமையினால் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் ஒன்று பின்வாங்கப்படாது என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags :
comments