சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவிற்கான மருத்துவ உபகரணங்கள் வழங்களும் கட்டிட திறப்பு விழாவும்

  • January 14, 2021
  • 69
  • Aroos Samsudeen
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவிற்கான மருத்துவ உபகரணங்கள் வழங்களும் கட்டிட திறப்பு விழாவும்

(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவிற்கான மருத்துவ உபகரணங்கள் வழங்களும் கட்டிட திறப்பு விழாவும் இன்று நடை பெற்றது.

சம்மாந்துறை பிராந்திய மக்களின் மிக நீண்டகால சுகாதார தேவைகளை நிறைவேற்றுமுகமாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவிற்கான மருத்துவ உபகரணங்களை கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் அசாத் எம்.ஹனீபாவிடம் கையளித்தார்.

அத்துடன் புதிதாக வைத்திசாலையில் நிர்மாணிக்கப்பட்ட கிளினிக் கட்டத்தொகுதி மற்றும் வைத்தியர்களுக்கான தங்குமிட கட்டத்தொகுதி என்பனவும் திறந்து வைக்கப்பட்டன

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் றஜாப், விசேட வைத்திய நிபுணர்கள், பிராந்திய திட்டமிடல் வைத்தியர் டாக்டர் எம்.சி.எம். மாஹிர், வைத்தியசாலை திட்டமிடல் வைத்தியர் நியாஸ் அஹமட், வைத்தியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் மற்றும்
கல்முனைப்பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டனர்.

Tags :
comments