முஷாரப் எம்.பி.யின் மர நடுகைத்திட்டம் அட்டாளைச்சேனையில் முன்னெடுப்பு

  • February 6, 2021
  • 141
  • Aroos Samsudeen
முஷாரப் எம்.பி.யின் மர நடுகைத்திட்டம் அட்டாளைச்சேனையில் முன்னெடுப்பு

(எம்.என்.றிப்கி அஹமட்)

அம்பாரை மாவட்டத்தில் பசுமைப்புரட்சியை ஏற்படுத்துவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ் எம் எம் முஷாரபினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஒரு மில்லியன் மரங்களை நடும் வேலைத்திட்டத்திட்டம் இன்று அட்டாளைச்சேனை பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

லக்கி விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மரம் நடுகை நிகழ்வில் கழகத்தின் தலைவரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ், பொருளாளர் யு.எல்.முனாப், அமைப்பாளர் எம்.எல்.அன்சார், மௌலானான பேக்கரி உரிமையாளர் தையுப் மற்றும் கழக அங்கத்தவர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் மரங்களை நட்டு வைத்தனர்.

மரங்களை வளர்க்கும் மனங்களை வளர்ப்போம் எனும் தொனிப்பொருளின் கீழ் எதிர்வரும் ஐந்து வருடத்திற்குள் ஒரு மில்லியன் மரங்களை அம்பாரை மாவட்டத்திலுள்ள சகல பிரதேசங்களிலும் நடுவதற்கான நோக்கோடு இவ்வேலைத்திட்டம் பொத்துவில் பிரதேசத்தில் கடந்த வாரம் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ் எம் எம் முஷாரபினால் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

வீடுகள், பொது இடங்கள், அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், மத ஸ்தாபனங்கள்,வயல் காணிகள் உள்ளிட்ட சகல இடங்களிலும் பொதுமக்களின் பங்களிப்புடன் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 

Tags :
comments