இம்ரான்கான் உரை நிகழ்த்துவதை தடுத்து, அவமதிப்பை ஏற்படுத்தி உள்ளனர் – ஹக்கீம்

  • February 19, 2021
  • 59
  • Aroos Samsudeen
இம்ரான்கான் உரை நிகழ்த்துவதை தடுத்து, அவமதிப்பை ஏற்படுத்தி உள்ளனர் – ஹக்கீம்

சொந்தப் பிரதமரின் கூற்றையே அவமானப்படுத்துகிற அரசாங்கம், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இலங்கைப் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்துவதை தடுத்து, அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான  ரவூப் ஹக்கீம் நேற்று வியாழக்கிழமை, 18 ஆம் திகதி தெரிவித்தார். எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Tags :
comments