(எஸ்.எம்.அறூஸ்)
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை பிரிவில் 2020ம் ஆண்டுக்கான சிறந்த உணவு நிலையங்களுக்கான தரச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அட்டாளைச்சேனை சவர்மா கிங் ரெஸ்டுரண்ட் A தரச்சான்றிதழ் பெற்றுள்ளது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் வைத்தே A தரச்சான்றிதழை அட்டாளைச்சேனை சவர்மா கிங் ரெஸ்டுரண்ட் பெற்றுக்கொண்டுள்ளது.
சவர்மா கிங் ரெஸ்டுரண்டின் உரிமையாளர் ஏ.எல்.எம்.அஸ்ரப் வாஹீர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு A தரச்சான்றிதழைப் பெற்றுக்கொண்டார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ.சுகுணன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் டாக்டர் ரஜாப், பிராந்திய சுகாதார பணிமனையில் திட்டமிடல் பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர் எம்.சீ.எம் மாஹிர், பிராந்திய சுகாதார பணிமனையில் சுற்றாடல் உணவு பாதுகாப்பு பொறுப்பதிகாரி டாக்டர் ரமேஸ் உள்ளிட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள், உணவகங்களின் உரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
துறைநீலாவனை தொடக்கம் பொத்துவில் வரைக்குமான கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலய பிரிவில் உள்ள சுமார் 230 உணவகங்கள் காணப்படுகின்ற போதிலும் 5 உணவகங்கள்தான் A தரத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் 5 A தரச்சான்றிதழ் பெற்றுள்ள உணவகங்களில் அட்டாளைச்சேனை சவர்மா கிங் ரெஸ்டுரண்ட் புள்ளிகள் அடிப்படையில் மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளது.
முதலாமிடத்தை அக்கறைப்பற்று சீமா ஹோட்டலும், இரண்டாமிடத்தை சாய்ந்தமருது சீபிறிஸ் ரெஸ்டுரண்டும் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அட்டாளைச்சேனை சவர்மா கிங் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவு பெறுகின்ற நிலையில் A தரச்சான்றிதழ் பெற்றிருப்பது தூய்மையானதும், தரமிக்கதுமான உணவுச் செயற்பாட்டுக்குக் கிடைத்த அங்கீகாரமாகும்.
சவர்மா கிங் ரெஸ்டுரண்டின் உரிமையாளர் ஏ.எல்.எம்.அஸ்ரப் வாஹீர் மிகச்சிறந்த முறையில் திட்டமிட்டு, ஒழுங்கமைத்து இந்த ரெஸ்டுரண்டை நடாத்தி வருகின்றார். அம்பாரை மாவட்டம் மாத்திரமல்ல மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்தும் கூடுதலான வாடிக்கையாளர்கள் சவர்மா கிங்கிற்கு வருகை தருகின்றனர்.
A தரச்சான்றிதழ் பெற்றுள்ள சவர்மா கிங் ரெஸ்டுரண்டுக்கும் அதன் உரிமையாளர் ஏ.எல்.எம்.அஸ்ரப் வாஹீருக்கும் அட்டாளைச்சேனை லக்கி விளையாட்டுக் கழகம், புறத்தோட்டம் கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் நுஜா ஊடக அமைப்பு,கோல்ஸ் விளையாட்டுக் கழகம் என்பன தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.