சுகாதார பிரதியமைச்சர் பைசல் காசீம் மட்டக்களப்பு வைத்தியசாலைகளுக்கு நாளை விஜயம்

  • January 23, 2016
  • 870
  • Aroos Samsudeen

Image title

கிழக்கு மாகாண சுகாதாரத்துறையை மேம்படுத்தும் நோக்கில் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் கிழக்கு மாகாணத்திற்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

யுத்த நெருக்கடியினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் சுகாதாரத்துறை நலிவடைந்துள்ளது. கிழக்கு மாகாணத்தின் சுகாதாரத்துறை தொடர்பான குறைபாடுகளைக் களைவதே அரசாங்கத்தின் கொள்கையாகும். இந்த வகையில் வைத்தியர் பற்றாக்குறை, தாதியர் பிரச்சனை, வாட்டில் தங்கியிருக்கும் நோயாளிகள் எதிர் நோக்கும் கஷ்டங்கள், உபகரணப்பற்றாக்குறை, அன்பியுலன்ஸ் வசதிகளை மேற்கொள்ளல் போன்றவற்றை சீர் செய்வதற்கு சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக கௌரவ பிரதி அமைச்சர் பைசால் காசிம் கிழக்கில் பல்வேறு வைத்தியசாலைகளுக்கு விஜயம் செய்கின்றார்.

நாளை சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் சாந்திவெளி, மாவடிவேம்பு, நெடியமடு, கறடியனாறு, செங்கலடி ஆகிய வைத்தியசாலைகளுக்கு விஜயம் செய்கின்றார். பிரதி அமைச்சரின் இவ்விஜயத்தின் போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர், மாவட்ட அரசியல் பிரமுகர்கள், சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் என பலர் பங்கேற்கின்றனர்.

(எம்.ஐ அஹமட் கபீர்)

சுகாதார,போசணை மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்.

Tags :
comments