2050 ஆம் ஆண்டளவில் கடலில் மீன்கள் இல்லாமற்போகும் அபாயம்

  • January 23, 2016
  • 669
  • Aroos Samsudeen

Image title

உலகம் முழுவதும் ஒரு ஆண்டுக்கு குறைந்தது 8 மில்லியன் டன்கள் அளவுக்கு பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் கொட்டப்பட்டு வருகின்றன.

இது ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு லொரி மூலமாக குப்பையை கொட்டுவதற்கு சமமானதாகும். இதற்கு உடனடியாக தீர்வு காணப்படாவிட்டால் 2030 ஆம் ஆண்டுக்குள் இருமடங்காகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுவே, 2050 ஆம் ஆண்டுக்குள் 4 மடங்காக அதிகரித்து விடும். இதன் எதிரொலியாக, கடலில் மீன்களை விட பிளாஸ்டிக் குப்பைகளே அதிகம் இருக்கும் அபாயமான நிலை உருவாகும்.

தற்போது, கடலில் 150 மில்லியன் டன்களுக்கும் அதிகமாக பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளன. கடந்த 50 ஆண்டுகளில் பிளாஸ்டிக் பயன்பாடு 20 மடங்காக அதிகரித்துள்ளது. அடுத்த 20 ஆண்டுகளில் இது மேலும் இரட்டிப்பாகும் அபாயமும் உள்ளது. பெரும்பாலான பிளாஸ்டிக்கால் பொதிசெய்யப்பட்ட பொருட்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடியதாக இருக்கிறது.

Tags :
comments