ஐந்தாம் தலைமுறை ஜெட் போர் விமானம்

 • January 25, 2016
 • 1606
 • Aroos Samsudeen

Image title

ஐந்தாம் தலைமுறை ஜெட் போர் விமானம் (Fifth-generation jet fighter) என்பது ஐக்கிய அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் மிகவும் மேம்பட்ட போர் விமானத்தின் வகைப்பாடு ஆகும். 2015 வரை இது ஒன்றே மிக அதிக நவீன தொழில்நுட்பங்களை கொண்ட போர் விமானமாகும். நான்காம் தலைமுறை போர்விமானங்களிலிருந்து இது மேம்படுத்தப்பட்டது.

ஆயுதமேந்திய இந்த விமானத்தை ரேடாரால் கூட கண்டுபிடிக்க இயலாது. மேலும் ரேடார் இடைமறிப்புக்கு குறைந்த நிகழ்தகவு மற்றும் மேம்படுத்தப்பட்ட வான் மின்னணுவியல் மற்றும் நவீன கணினி அமைப்பு போன்ற மேம்பாடுகளை ஐந்தாம் தலைமுறை ஜெட் போர் விமானம் கொண்டுள்ளது. தற்பொழுது பயன்பாட்டில் உள்ள ஒரே ஐந்தாம் தலைமுறை ஜெட் போர்விமானம் ஐக்கிய அமெரிக்க வான்படையில் பயன்படுத்தப்படும் போர்விமானம் லாக்ஹீட் மார்டின் எப்-22 ராப்டர் ஆகும்.

எப்-22

Image title

எப்-22 அல்லது எப்-22 ரப்டர் ஒரு தனி இருக்கை, இரட்டை என்ஜின், ஐந்தாம் தலைமுறை, மிகை திசையமைவு மாறுவீதம் மற்றும் மறைந்து தாக்கும் நுட்பம் கொண்ட தாக்குதல் வானூர்தியாகும்.

Image title

தொழில்நுட்பத் தகவல்கள்

 • நீளம்: 62 அடி 1 அங் (18.90 மீட்டர்)
 • உயரம்: 16 ft 8 in (5.08 m)
 • இறக்கையின் பரப்பளவு: 840 ft² (78.04 m²)
 • வெற்று நிறை: 43,430 pound (mass) (19,700 kg)
 • ஏற்றப்பட்ட எடை: 64,460 lb (29,300 kg)
 • பறப்புக்கு அதிகூடிய எடை: 83,500 lb (38,000 kg)

எப்-35Image title

எப்-35 அல்லது எப்-35 மின்னல் II ஒரு தனி இருக்கை, தனிப் பொறி, ஐந்தாம் தலைமுறை, பல்வகைத் தாக்குதல் வானூர்தியாகும்.

தொழில்நுட்பத் தகவல்கள்

 • நீளம்: 51.4 அடி (15.67 மீ)
 • உயரம்: 14.2 அடி பி – 14.2, சி: 14.9 அடி (4.54 மீ) (4.33 மீ)
 • இறக்கையின் பரப்பளவு: 460 அடி² (42.7 மீ²)
 • வெற்று நிறை: 29,300 ப (13,300 கி)
 • ஏற்றப்பட்ட எடை: 49,540 ப எப்-35பி: 47,996 ப (21,771 கி); எப்-35சி: 57,094 ப (25,896 கி) (22,470 கி)

சுகோய் பிஏயூ எப்ஏ
Image title
பிஏயூ எப்ஏ (PAK FA) என்பது உரசிய வான்படைக்கான ஐந்தாம் தலைமுறை சண்டை வானூர்தி ஆகும். டி-50 பிஏயூ எப்ஏ திட்டத்திற்காக சுகோய் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட வானூர்தி ஆகும். இவ்வானூர்தி மறைந்து தாக்கும், இரட்டைப் பொறி கொண்ட, தனி இருக்கை தாரை வானூர்தி ஆகும். இது உரசிய வான் படையில் முதலாவதாக செயற்படும் மறைந்து தாக்கும் வானூர்தியாக இருக்கவிருக்கிறது. பல பாத்திர வானூர்தியான இது வான் மேலாதிக்கம், தரைத்தாக்குதல் ஆகிய இரு நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்த முடியும்.

செங்டு ஜே-20

செங்டு ஜே-20 (Chengdu J-20) என்பது மறைந்து தாக்கும், இரட்டைப் பொறி கொண்ட, ஐந்தாம் தலைமுறை சண்டை வானூர்தி மாதிரி ஆகும். இது சீனாவின் மக்கள் விடுதலை இராணுவ வான்படைக்காக செங்டு பறப்பியல் விண்வெளிக் கூட்டுத்தாபனத்தினால் தயாரிக்கப்படுகிறது. ஜே-20 தன் கன்னிப் பறப்பை 11 சனவரி 2011, அன்று மேற்கொண்டது. இது 2017-2019 ஆம் ஆண்டளவில் செயற்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Tags :
comments