சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய வார நிகழ்வுகள்

  • January 26, 2016
  • 670
  • Aroos Samsudeen

Image title

(ஹாசிப் யாஸீன்)

ஜனாதிபதி செயலகம், அரச நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு, விளையாட்டுத்துறை அமைச்சின் அறிவுறுத்தல்களுக் கமையவிளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி வாரத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலகஉத்தியோகத்தர்களுக் கிடையிலான சைக்கிள் ஓட்டப் போட்டி நேற்று(25) திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. 

சைக்கள் ஓட்டப் போட்டினை பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டவுள்யூ.ஏ.கபார்உள்ளிட்டோர் ஆரம்பித்து வைத்தனர்.

போட்டியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை ஏ.இஸ்ஸதீன் (திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்), எம்.ஏ.எம்.ஜிப்ரி(முகாமைத்துவ உதவியாளர்), எம்.தஸ்மீர்; (பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் காரியாலய உத்தியோகத்தர்களுக்கான உடற்பயிற்சிஇடம்பெற்றது.

Image title

Tags :
comments