மீண்டும் இனவாதிகளுக்கு, இடம் கொடுக்ககூடாது – தர்மசிறி பண்டாரநாயக்க

  • January 27, 2016
  • 774
  • Aroos Samsudeen

Image title

இலங்கை மீளவும் இனவாதிகளின் சொர்க்கபூமியாக மாற்றமடைய இமளிக்கக் கூடாது என பிரபல திரைப்பட இயக்குனரும் சமூக நீதிக்கான அமைப்பின் உறுப்பினருமான தர்மசிறி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -26- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக இங்கு பேசிய அவர்,

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முன்னின்று செயற்பட்ட அனைத்து தரப்புக்களும் அரசாங்கம் பிழையான பாதையில் செல்வதனை சுட்டிக்காட்ட வேண்டும்.

அரசாங்கத்தை சரியான பாதையில் இட்டுச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைத்து தரப்பிற்கும் உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே மீண்டும் இலங்கையில் இனவாதிகளுக்கு இடம் கொடுக்க கூடாது என்றார்.

Tags :
comments