தென் ஆபிரிக்க கிரிக்கெட் வீரர் போதிக்கு 20 வருட தடை!

  • January 27, 2016
  • 692
  • Aroos Samsudeen

Image title

கிரிக்கெட் ஒழுக்க விதி­க­ளுக்கு அமைய தடைக்­கு­ரிய காலத்தின் முதல் ஐந்து வரு­டங்­களில் வேறு குற்றச் செயல்­களில் ஈடு­ப­டா­ம­லி­ருப்­பதை போதி உறுதி செய்ய வேண்டும் என வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் விளை­யாட்டு வீரர்­க­ளுக்­கான மோசடி தடுப்பு திட்­டங்­களில் முனைப்­பு­டனும் ஆக்­க­பூர்­வ ­மா­கவும் பங்­கு­பற்றி வரு­வதை தென் ஆபி­ரிக்க கிரிக் கெட் நிறு­வ­னத்தின் திருப்­திக்கு அமைய ஒப்­பு­விக்க வேண்டும் என்ற நிபந்­த­னையும் போதிக்கு விதிக்­கப்­பட்­டுள்­ளது.

உள்ளூர் கிரிக்கெட் போட்­டி­களில் மோச­டி­களைப் புகுத்­து­வ­தற்கு சர்­வ­தேச கும்பல் ஒன்று ஈடு­பட்­டுள்­ள­தாக தக­வல்கள் கசிந்­துள்­ளதால் வீரர்கள் விழிப்­புடன் செயற்­பட வேண்டும் என தென் ஆபி­ரிக்க கிரிக் கெட் நிறு­வனம் கடந்த வருடம் நவம்பர் மாதம் 6ஆம் திகதி ஊடக அறிக்கை மூலம் தெரி­வித்­தி­ருந்­தது.

இதனை அடுத்து மோசடி தடுப்பு விதி­களில் பல­வற்றை மீறி­ய­தாக போதிக்கு எதி­ராக அதே வருடம் டிசம்பர் 31 ஆம் திக­தி­யன்று குற்­றப்­பத்­தி­ரிகை தாக் கல் செய்­யப்­பட்­டது.

இது தொடர்­பாக வேறு வீரர்­க­ளிடம் விசா­ர­ணை கள் நடத்­தப்­ப­டு­கின்­றதா என்பது குறித்து தென் ஆபிரிக்க கிரிக்கட் நிறுவனம் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் இந்த விசாரணைகள் இன்னும் முடியவில்லை என்பதை தென் ஆபிரிக்க கிரிக்கெட் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

Tags :
comments