19 வயதுக்குட்பட்டோர் உலகக் கிண்ணம்: பங்களாதேஷ், இங்கிலாந்து வெற்றி

  • January 27, 2016
  • 554
  • Aroos Samsudeen

Image title

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டிகள், பங்களாதேஷில் இன்று ஆரம்பித்த நிலையில், முதல்நாள் இடம்பெற்ற போட்டிகளில், பங்களாதேஷ், இங்கிலாந்து அணிகள் வெற்றிபெற்றன.

பங்களாதேஷ், தென்னாபிரிக்க அணிக்களுக்கிடையிலான போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றது. நஸ்முல் ஹொஸைன் ஷான்டோ 73 (82), ஜொய்ராஸ் ஷேக் 46 (50), பினாக் கோஷ் 43 (51) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் வியான் முல்டெர், 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பதிலளித்தாடிய தென்னாபிரிக்க அணி, 48 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 197 ஓட்டங்களைப் பெற்றுத் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் லியம் ஸ்மித் 100 (146) ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில், மெஹ்டி ஹஸன், மொஹமட் சய்‡புடின் இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும் சயீட் சர்கார், சாலே அஹ்மட் ஷவொன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இங்கிலாந்து அணிக்கும் பிஜி அணிக்குமிடையிலான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 371 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் டான் லொவ்ரென்ஸ் 173 (150), ஜக் பேர்ஹம் 148 (137) ஓட்டங்களைப் பெற்றனர். பதிலளித்தாடிய பிஜி அணி, 27.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 72 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுத் தோல்வியடைந்தது. அவ்வணி சார்பாக அதிகபட்சமாக, பெனி வுனிவாகா, 36 (74) ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் சஹிக் மஹ்மூட், சாம் குர்றான் இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும் பென் கிறீன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Tags :
comments