பொருட்களை ஈர்க்கும் தோலுடைய விநோத மனிதன் "ஜாமி கீட்டன்"

  • January 27, 2016
  • 676
  • Aroos Samsudeen

Image titleப்ளோரிடாவைச் சேர்ந்த ஜாமி கீட்டன் (Jamie Keeton) தலையில் கப், கேன், பாட்டில் போன்ற பொருட்கள் ஒட்டிக்கொள்கின்றன.

இதற்கென அவர் ஒட்டும் பசைகள் எவற்றையும் பயன்படுத்துவதில்லை.

இவரது தோலில் உள்ள துளைகள் அவற்றை உறிஞ்சிக் கொள்வதாகக் கூறப்பட்டுள்ளது.

சிறு வயது முதலே அவருக்கு இந்த சக்தி உள்ளது. பைன் மரங்களில் சிறு வயதில் ஏறி விளையாடும் பழக்கம் இவருக்கு இருந்ததால் மரத்தின் சாறு காரணமாக பொருட்கள் ஒட்டிக்கொள்வதாக அனைவரும் நினைத்துள்ளனர்.

20 வயதில் தான் தனது தோல், பொருட்களை ஈர்த்துக்கொள்வதை அறிந்திருக்கிறார் ஜாமி கீட்டன்.

“நல்ல வெய்யில் காலம். முதல் முறை மொட்டை அடித்திருந்தேன். குளிர்ச்சியாக இருக்கட்டும் என்று சோடாவை வாங்கித் தலையில் வைத்தேன். நண்பர்கள் பந்தை எறிந்து, சோடாவைத் தள்ளிவிட்டனர்.

சோடா பாட்டில் சாய்ந்ததே தவிர கீழே விழவில்லை. பசை போட்டு ஒட்டியது போல ஒட்டிக்கொண்டது. சோடா மட்டும் கீழே கொட்டி விட்டது. எல்லோரும் இதைக் கண்டு சிரித்தனர். பல பொருட்களை வைத்துப் பார்த்தேன்.

எல்லாமே ஒட்டிக்கொண்டன. ஒக்டோபஸ் உணர்கொம்புகள் போல என் தலை அனைத்தையும் இழுத்துக்கொண்டது. மருத்துவரிடம் சென்றேன்.

மருத்துவருக்கும் காரணம் தெரியவில்லை. பின்னர் சில மருத்துவர்கள் ஏதோ குறைபாடு என்றார்கள். அமெரிக்காவிலேயே இந்தக் குறைபாடு உள்ள ஒரே மனிதன் நான்தான்.

இந்தியாவிலும் தென் அமெரிக்காவிலும் இருவர் இருக்கிறார்கள்”. என தெரிவித்துள்ளார் ஜாமி.

இன்று இவர் அமெரிக்காவில் ஒரு மிகப்பெரும் பிரபலம். வாரத்திற்கு ஒன்றரை இலட்சம் முதல் ஐந்தரை இலட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார்.

சிலர் அவர்களின் பொருட்களை ஜாமியின் தலையில் வைத்து விளம்பரம் செய்துகொள்கிறார்கள். சிலர் அவர் அணியும் ஆடையில் விளம்பரம் செய்கிறார்கள்.

“சமீபத்தில் கின்னஸ் சாதனையையும் நிகழ்த்திவிட்டார் ஜாமி”.

Tags :
comments