எச்சரிக்கை : குடிபானங்களினால் உடல்பருமன் அதிகரிப்பு

  • January 28, 2016
  • 590
  • Aroos Samsudeen

Image title

ஆரோக்கியமற்ற உணவை சந்தைப்படுத்துவதை உலக அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் சிறார்கள் மோசமாக குண்டாவதைத் தடுக்க சர்க்கரை கலந்த குடிபானங்கள் மீது அரசுகள் வரிவிதிப்பது பற்றி பரிசீலிக்கவேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

குழந்தைப் பருவத்தில் உடல் பருமனாதலை குறைப்பதற்கான முக்கியத்துவம் குறித்த அறிக்கை ஒன்றில் உலக சுகாதார நிறுவனம் இந்த பரிந்துரைகளை முன் வைத்துள்ளது.

1990 முதல் உலக அளவில் அதிக எடை கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 33 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்கா அல்லது ஆசியாவில் 4 கோடி சிறுவர்களில் அரைவாசிப் பேர் 5 வயதாவதற்கு முன்னரே கடும் பருமனாகிவிடுவதாகவும், இதற்கு வளர்ந்து வரும் நாடுகளில் ஆரோக்கியமற்ற மற்றும் சர்க்கரை கலந்த குடிபானங்களின் தீவிர சந்தைப்படுத்தலே காரணம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்போது சிறுவர்கள் வெளியில் விளையாடுவதை தவிர்த்து, இணைய விளையாட்டுக்களில் அதிக நேரம் செலவிடுவதால் அவர்களுக்குத் தேவையான உடற்பயிற்சி இல்லாமையும் இந்தப் பிரச்சினைக்கு காரணம் என்றும் உலக சுகாதார நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Tags :
comments