70 முதலைகளை கடத்திச் சென்ற தில்லாலங்கடி நபர் கைது

  • January 28, 2016
  • 917
  • Aroos Samsudeen

Image title

வியட்நாமிய எல்லைக்கு அருகில், ஃபான்சென்ங்காங் எனும் இடத்தில் வாகன சோதனைகளில் ஈடுபட்டிருந்த சீன பொலிஸார் தற்செயலாக லொறியொன்றை நிறுத்தி சோதனையிட்டபோது இம்முதலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேற்படி லொறியில் என்ன வகையான பொருட்கள் என பொலிஸார் விசாரித்தபோது, லொறியின் சாரதி கூறிய பதிலும் லொறியிலுள்ள பொருட்களுக்கும் முரண்பாடானவையாக இருந்தன.

பின்னர் அந்த லொறியை சோதனையிட்டபோது அதற்குள் உறைந்த நிலையில் 70 முதலைகளும் மேலும் 88 முதலைகளின் வால்களும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதையடுத்து மேற்டி முதலைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சியாமிஸ் ரகத்தைச் சேர்ந்த இம்முதலைகள் வியட்நாம் இந்தோனேஷியா, புரூணை, மலேஷியாவின் கிழக்குப் பிராந்தியம், லாவோஸ், கம்போடியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன.Image title

தோலை பெறுவதற்காக அவை வேட்டையாடப்படுவதாகவும் இதனால் இவை அழிந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Tags :
comments