துறோ போல் விளையாட்டு பாலமுனையில் அறிமுகம்

  • January 28, 2016
  • 1125
  • Aroos Samsudeen

Image title

(எஸ்.எம்.அறூஸ்)

ஜனாதிபதியின் ஆலோசனையில் விளையாட்டுத்துறை அமைச்சு முன்னடுத்துள்ள விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் துறோ போல் விளையாட்டு இன்று வியாழக்கிழைமை பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கான துறோ போல் விளையாட்டு இணைப்பாளரும்,உடற்கல்வி ஆசிரியருமான ஐ.எல்.எம்.பாயிஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.எ.அன்ஸில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

விசேட அதிதிகளாக அக்கரைப்பற்று கல்வி வலய உடற்கல்வி உதவிப்பணிப்பாளர் எஸ்.எம்.ஜெமீல், ஆசிரிய ஆலோசகர் எம்.எச். ஹம்மாத், லீன் பத்தாஹ் அமைப்பின் ஸ்தாபகர் NT.சஹ்பத் அல்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.

துறோ போல் பயிற்றுவிப்பாளர் யூ.எல். றபியுதீன் மாணவர்களுக்கு துறோ போல் விளையாட்டை அறிமுகம் செய்து வைத்ததுடன் பயிற்சிகளையும் வழங்கினார்.

முதன் முறையாக அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட துறோ போல் விளையாட்டை சகல பிரதேசங்களுக்கும் அறிமுகப்படுத்தி அதனை பிரபல்யப்படுத்தவதற்கான வேலைத்திட்டங்களை அக்கரைப்பற்ற கல்வி வலயம் மேற்கொள்ள வேண்டுமென இணைப்புச் செயலாளர் எம்.ஏ.அன்ஸில் இங்கு உரையாற்றும்போது குறிப்பிட்டார். அத்தோடு விளையாட்டுத்துறை அமைச்சின் ஒத்துழைப்பினையும் பெற்றுத்தருவதாகவும், இவ்விளையாட்டுக்குப் பொறுப்பாக நியமிக்ப்பட்டுள்ள ஆசிரியர் பாயிஸ் அர்ப்பணிப்பு மிக்கவர். அவரின் முன்னடுப்புக்கள் துறோ போல் விளையாட்டை முன்னேற்றமடையச் செய்யும் எனவும் இங்கு தெரிவித்தார்.

அத்தோடு அக்கரைப்பற்று கல்வி வலய துறோ போல் இணைப்பாளர் ஐ.எல்.எம்.பாயிஸிடம் விளையாட்டுத்துறை பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.எ.அன்ஸில் துறோ போல் பந்துகளையும் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்சிக்கு அனுசரனையினை அக்கரைப்பற்று கல்வி வலய அலுவலகமும், லீன் பத்தாஹ் அமைப்பும் இனைந்து வழங்கியது.

இங்கு உடற்கல்வி ஆசிரியர்களான எம்.எம். முபீர், ஐ எல்.சாதிக், ஏ.ஜி.எம் றிஸ்வான். எம்.ஐ.எம்.அஸ்மி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Image title

Image title

Image title

Image title

Image title

Image title

Image title

Tags :
comments