2015ம் ஆண்டுதான் பூமியிலேயே இதுவரை பதிவான வெப்ப நிலையிலேயே அதிக வெப்ப நிலை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் இதுகுறித்த விவரங்களை நாசா மற்றும் “நோவா” எனப்படும் தேசிய கடலியல் மற்றும் வளிமண்டலவியல் நிர்வாகக் கழகம் (National Oceanic and Atmospheric Administration (NOAA).) ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ளன.
1880ம் ஆண்டு முதல் பூமியில் வெப்ப நிலையைப் பதிவு செய்யும் முறை தொடங்கியது. அது முதல் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பதிவு செய்யப்பட்ட வெப்ப நிலையை ஆய்வு செய்து நாசாவும், நோவாவும் 2015ம் ஆண்டுதான் இதுவரை பூமியிலேயே வெப்ப நிலை அதிகம் பதிவான ஆண்டு என்று கூறியுள்ளது.
இதற்கு முன்பு 2014ம் ஆண்டுதான் வெப்ப நிலை அதிகமான வருடமாக இருந்தது. தற்போது அதை விட 0.13 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை 2015ல் கூடுதலாக பதிவாகியுள்ளது.
இதற்கு முன்பு 1998ம் ஆண்டுதான் அதிக வெப்ப நிலை பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.