இந்திய 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு.. காயத்தால் மலிங்கா, ஹீரத் விலகல்

  • January 28, 2016
  • 684
  • Aroos Samsudeen

Image title

இந்திய அணிக்கெதிராக சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ள இலங்கை டி20 அணி வீரர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மூன்று டி20 போட்டிகளில் ஆடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியா வருகிறது. பெப்ரவரி 9ம் தேதி முதல் டி20 போட்டி புனேயில் நடைபெறுகிறது.

இதையடுத்து 15 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் தேர்வு வாரியம் இன்று தேர்ந்தெடுத்துள்ளது. வழக்கமான கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான லசித் மலிங்க காயத்தால் விலகியுள்ளார். அவருக்கு பதில் தினேஷ் சந்திமால் அணித்தலைவராக‌ இருப்பார். திலகரத்ன‌ தில்ஷான், பிரசன்ன, மிலிந்த‌ ஸ்ரீவர்தன, தனுஷ்க குணதிலக, திசார பெரேரா, தசுன் சனாக, அசேல குனரத்ன‌, சமர கபுகெதர, சமீர துஷ்மந்த, தில்ஷர பெர்ணான்டோ, ரஜித, பினுர பெர்ணான்டோ, சசித்ர சேனநாயக‌. ஆகியோர் அணிக்காக தேர்வான வீரர்களாகும். அனுபவ வீரர்கள் குலசேகர, ரங்கன ஹேரத் ஆகியோர் காயத்தால் இந்த தொடரில் ஆட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
comments