ஓய்வின் பின்னரும் மாறாத சங்கக்காரவின் அதிரடி ஆட்டம்

  • January 29, 2016
  • 565
  • Aroos Samsudeen

Image title

நேற்றைய தினம் மாஸ்டர்ஸ் சம்பியன்ஸ் லீக் தொடரின் முதலாவது போட்டி டுபாய் மைதானத்தில் இடம்பெற்றது. இந்த போட்டியில் சேவாக்கின் ஜெமினி அராபியன்ஸ் அணியும் கலிஸின் லிப்ரா லெஜன்ட்ஸ் அணிகளும் மோதின.

ஜெமினி அணி சார்பாக சங்கா மற்றும் முரளி விளையாடிமை குறிப்பிடத்தக்கது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஜெமினி அராபியன்ஸ் 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 234 ஓட்டங்களைக் குவித்தது.

இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சங்கா 43 பந்துகளில் 86 ஓட்டங்களை குவித்தார். இதில் 7 ஆறு ஓட்டங்களும் 6 நான்கு ஓட்டங்களும் உள்ளடங்கும். இவர் தான் எதிர் கொண்ட இறுதி 11 பந்துகளில் 44 ஓட்டங்களை விளாசியமை விசேட அம்சமாகும்.

ஹொட்ஜ் தன் பங்கிற்கு 19 பந்துகளில் 46 ஓட்டங்களை விளாச ஜெமினி அராபியன்ஸ் 234 ஓட்டங்களை குவித்தது.

235 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய லிப்ரா லெஜன்ட்ஸ் 20 ஓவர்கள் நிறைவில் 156 ஓட்டங்களை மாத்திரமே குவித்தது. முரளிதரன் 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

போட்டியின் நாயகனாக சங்கா தேர்வு செய்யப்பட்டார். இவ்வகையான ஆட்டத்தினால் தான் மிகச் சிறந்த வீரர் என்பதை சங்கக்கார மீண்டும் ஒரு முறை உறுதி செய்துள்ளார்.

Tags :
comments