சீக்குகே பிரசன்ன சகலதுறைகளிலும் பிரகாசிப்பு; ஹம்பாந்தொட்ட ட்ரூப்பர்ஸ் இலகு வெற்றி

  • January 29, 2016
  • 788
  • Aroos Samsudeen

Image title

கோல் கார்­டியன்ஸ் (காலி) அணிக்கு எதி­ரான சுப்பர் இரு­பது 20 மாகாண கிரிக்­கெட்டின் ஆரம்பப் போட்­டியில் 163 ஓட்­டங்­களை என்ற வெற்றி இலக்கை அடைந்து வெற்­றி­யீட்­டிய கலம்போ கமாண்டோஸ், அதே வெற்றி இலக்கை தனது இரண்­டா­வது போட்­டியில் ஹம்­பாந்­தோட்ட ட்ரூப்­பர்­ஸிடம் (அம்­பாந்­தோட்டை) தாரை­வார்த்­தது.

கொழும்பு ஆர். பிரே­ம­தாச விளை­யாட்­ட­ரங்கில் கடந்த புதன்­கி­ழமை நடை­பெற்ற போட்­டியில் கமோண்டோஸ் அணியை 6 விக்­கட்­களால் ட்ரூப்பர்ஸ் அணி வெற்­றி­கொண்­டது.

இப் போட்­டியில் சகல துறை­க­ளிலும் சீக்­குகே பிர­சன்ன பிர­கா­சித்து, இலங்­கையின் உலக இரு­பது 20 அணியில் இடம்­பி­டிப்­ப­தற்­கான தனது வாய்ப்பை அதி­க­ரித்­துக்­கொண்­டுள்ளார்.

ஐந்து அணிகள் பங்­கு­பற்றும் இப் போட்­டியில் ட்ரூப்பர்ஸ் அணி ஈட்­டிய இரண்­டா­வது வெற்றி இது­வாகும்.

எண்­ணிக்கை சுருக்கம்

கமாண்டோஸ் 20 ஓவர்­களில் 162 க்கு 6 விக். (நிரோஷன் டிக்­வெல்ல 51, ஷெஹான் ஜய­சூ­ரிய 24, சதீர சம­ர­விக்­ரம 23, சீக்­குகே ப்ரசன்ன 23 க்கு 2 விக்., திலான் துஷார 33 க்க 2 விக்.)

ட்ரூப்பர்ஸ் 18.1 ஓவர்­களில் 163 க்கு 4 விக். (ஆஷான் பிரி­யஞ்சன் 41 ஆ.இ., சீக்­குகே பிர­சன்ன 40, சந்துன் வீரக்­கொடி 36)

கோல் கார்­டியன்ஸ் வெற்றி

குரு­ணே­கல வொரியர்ஸ் (குரு­நாகல்) அணிக்கு எதி­ரான போட்­டியில் லஹிரு மிலன்த, உதார ஜய­சுந்­தர ஆகிய இரு­வரும் ஆரம்ப விக்­கட்டில் பகிர்ந்த 108 ஓட்­டங்கள், கோல் கார்­டியன்ஸ் (காலி) அணிக்கு இல­கு­வான 8 விக்கட் வெற்­றியை சம்­பா­தித்­துக்­கொ­டுத்­தது.

எண்­ணிக்கை சுருக்கம்

வொரியர்ஸ் 20 ஓவர்­களில் 120 க்கு 9 விக். (சாமர கப்­பு­கெ­தர 20, அஜன்த மெண்டிஸ் 23 க்கு 2 விக்.)

கார்­டியன்ஸ் 16.3 ஓவர்­களில் 130 க்கு 2 விக். (லஹிரு மிலன்த 78, உதார ஜய­சுந்­தர 39 ஆ.இ., சாமர கப்­பு­கெ­தர 14 க்கு 2 விக்.)

இன்­றைய போட்­டிகள்

வொரியர்ஸ் எதிர் ட்ரூப்பர்ஸ்; க்ருசேடர்ஸ் எதிர் கமாண்டோஸ்

நாளைய போட்டிகள்

கார்டியன்ஸ் எதிர் க்ருசேடர்ஸ்; வொரியர்ஸ் எதிர் கமாண்டோஸ்

Tags :
comments