அட்டாளைச்சேனையில் இன்று தேசிய உடல் ஆரோக்கிய வாரத்தின் இறுதி நாள் நிகழ்வுகள்

  • January 30, 2016
  • 559
  • Aroos Samsudeen

Image title

(எஸ்.எம்.அறூஸ்)

விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய தேசிய வாரத்தின் இறுதித் தினமான இன்று (30) சனிக்கிழமை அட்டாளைச்சேனையில் பிரமாண்டமான முறையில் பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள் காலை முதல் மாலை வரை இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகம், அரச நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு, விளையாட்டுத்துறை அமைச்சு ஆகியவற்றின் வழிகாட்டலில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான விளையாட்டு மற்றும் உடல் ஆராக்கிய தேசிய வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விஷேட விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகளும் உடல் ஆரோக்கிய நிகழ்வுகளும் கடந்த 5 நாட்களாக வௌ;வேறு தொனிப்பொருளில் இடம்பெற்றன.

பாடசாலை சமூகம் மற்றும் ஏனைய அரசாங்க திணைக்களங்கள், விளையாட்டுக்கழங்கள், விளையாட்டு ஆர்வலர்கள் ஆகியோர் இணைந்த இந்த விளையாட்டு நிகழ்ச்சிகளை அட்டாளைச்சேனை பிரதேச செயலகங்கள் ஒழுங்கு செய்துள்ளதாக விளையாட்டு ஏ.எம்.றஸீன் தெரிவித்தார்.

காலை 7.00 மணிக்கு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகவுள்ளது. இதில் முதல் நிகழ்வாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடை பவணி இடம்பெறவுள்ளது. இதில் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், முப்படையினர், பாடசாலை மாணவர்கள், விளையாட்டுக் கழகங்களின் வீரர்கள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நடை பவணி அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் முன்பாக ஆரம்பமாகி பொது விளையாட்டு மைதானத்தை சென்றடையவுள்ளது.

இந்நடை பவணியில் கலந்து கொள்ளவதற்கு இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து திணைக்களங்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்று போட்டி அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

மாலை நேர நிகழ்வுகளில் அட்டாளைச்சேனை அனைத்து விளையாட்டுக் கழகங்களையும் உள்ளடக்கியதாக வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு ஒரு கண்காட்சி உதைபந்தாட்ட போட்டி இடம்பெறவுள்ளது

இறுதியாக போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வெற்றி வீரர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, விளையாட்டுத்துறை பிரதயிமைச்சரின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எ.அன்ஸில் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றிக் கிண்ணங்களையும் பரிசில்களையும் வழங்கி வைக்கவுள்ளார்

Tags :
comments