உயர்தரப் பரீட்சைக்கு எதிர்வரும் முதலாம் திகதி முதல் விண்ணப்பிக்க முடியும்

  • January 30, 2016
  • 474
  • Aroos Samsudeen

Image title

2016 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பெப்ரவரி முதலாம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார கூறியுள்ளார்.

பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் ஆலோசனை வழிகாட்டல்களை பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பிவைத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான மாதிரி விண்ணப்பப்படிவங்கள் மற்றும் ஆலோசனை வழிகாட்டல்களை www.doenets.lk என்ற இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

இதற்கமைய பாடசாலை பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் அதிபர் ஊடாகவும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை அவர்களாகவே பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னதாக கிடைக்கும் வகையில் பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
comments