காவியுடை தரித்தவர்கள் தொந்தரவு செய்யவும், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கவும் இடமளிக்கக்கூடாது – ஹக்கீம்

  • January 30, 2016
  • 561
  • Aroos Samsudeen

Image title

காவி உடை தரித்தவர்கள் நீதிமன்றங்களுக்கு தொந்தரவு செய்வதற்கு இடமளிக்க முடியாதெனத் தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நிலைமை மீண்டும் தலைதூக்க இடமளிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்;

அரசியல்வாதிகள் தவறிழைத்தால் பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை. சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்தால் தமக்குப் பிரச்சினைகள் வரும் என்பது அவர்களுக்குத் தெரியும். ஒரு ஊடகவியலாளர் மாநாட்டினுள் காவி உடை தரித்தவர்கள் நுழைந்து தாக்கியபோது அதனை வேடிக்கைப் பார்க்கும் நிலைதான் கடந்த ஆட்சியில் காணப்பட்டது.

இந்நிலை இனியும் தொடர அனுமதிக்க முடியாது. அதேவேளை காவி உடை தரித்தவர்கள் நீதிமன்றங்களுக்கு தொந்தரவு செய்வதற்கு இடமளிக்க முடியாது. கடந்த ஆட்சியை போல் இந்த ஆட்சியிலும் சட்டத்தில் இருந்து தப்பிக்கும் நிலைக்கு இடமளிக்க கூடாது. தகவலறியும் உரிமைச் சட்டம் அமுல்படுத்தப்படும் போது அது மக்களை மேலும் பலப்படுத்தும், ஊழல்களை வெளிப்படுத்தும். சட்டமும் ஒழுங்கும் துளிர்விடும். பொலிஸாரின் கடமையில் மாற்றம் வரும் என்றார்

Tags :
comments