சமயக் கடமை இருக்கிறதாம்..!!!! திங்கட்கிழமைதான் சரணடைவாராம்..!!!!

  • January 30, 2016
  • 383
  • Aroos Samsudeen

Image title

ஹோமாகம நீதிமன்றத்தின் முன்னால் கலகம் விளைவிக்கும் வகையில் பிரசன்னமாகியிருந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் திங்கட்கிழமை காலை, பொலிஸாரிடம் சரணடையவுள்ளதாக மாகல்கந்த சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.

சகோதர மொழி வானொலிக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்நாட்களில் சமய கடமைகள் சில இருப்பதன் காரணமாக திங்கட்கிழமை பொலிஸாரிடம் சரணடைவதாக அவர் கூறியுள்ளார்.

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரை விளக்கமறியலில் வைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது, குழப்பம் விளைவிக்கும் வகையில், நீதிமன்றத்துக்கு முன்னால் குறித்த தேரர் உட்பட சிலர் குழுமியிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில், .மாகல்கந்த சுதந்த தேரர் மற்றும் படல்கும்புர ஆரிய சாந்த தேரர் ஆகிய இருவரையும் கைதுசெய்து விசாரிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்நிலையிலேயே, திங்கட்கிழமை காலை தான் சரணடைவதாக தேரர் தெரிவித்துள்ளார்.

Tags :
comments