நான் அப்பாவி நான் செய்த, தவறு என்ன..? சிறையிருந்து கேட்கிறார் ஞானசாரா..!

  • January 30, 2016
  • 466
  • Aroos Samsudeen

Image title

உண்­மை­யான குற்­ற­வா­ளிகள் சுதந்­தி­ர­மாக நட­மாடும் நிலையில் நாட்டை நேசிக்கும் எம்­மை­போன்­ற­வர்­களை தண்­டித்து சிறையில் அடைத்து விட்­டது இந்த நல்­லாட்சி அர­சாங்கம் என்று கைது­செய்­யப்­பட்­டுள்ள கல­கொட அத்தே ஞான சார தேரர் தெரி­வித்­துள்ளார்.

அவ­ர் விடுத்துள்ள அறிக்­கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நான் எந்த சந்­தர்­ப்பத்­திலும் நாட்டில் இன­வா­தத்தை உரு­வாக்கும் வகை­யிலோ அல்­லது மதங்­களை கொச்­சைப்­ப­டுத்தும் வகை­யிலோ ஒரு­போதும் நடந்­து­கொண்­ட­தில்லை.

நான் இந்த நாட்டின் பௌத்த புத்­தி­ர­னா­கவே ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும் நடந்­துள்ளேன். எனக்கு எதி­ராக கடந்த ஜன­வரி 26ஆம் திகதி நீதி­மன்ற பிடி­யாணை வந்­ததும் நான் நீதி­மன்­றத்தை நாடிச் சென்றேன்.

அப்­போது என்னை கைது­செய்­தனர். என்னை சிறையில் அடைத்த பின்னர் எனக்­காக வாதாட சட்­டத்­த­ரணி ஒரு­வ­ரைக்­கூட அனு­ம­திக்க முடி­யாது என குறிப்­பிட்­டனர்.

சட்­டத்தை நாடும் எந்­த­வொரு தனி மனி­த­னுக்கும் தான் ஒரு சட்­டத்­த­ர­ணியை நாடும் உரிமை உள்­ளது. ஆனால் எனது விட­யத்தில் அதுவும் மறுக்­கப்­பட்­டுள்­ளது. நாம் எப்­போதும் நாட்டின் மீது மரி­யா­தையும் பற்றும் வைத்­துள்­ள­தை­போ­லவே நாட்டின் சட்டம் மீதும் அதிக மதிப்பு வைத்­துள்ளோம். அந்த சட்­டத்­துக்கு கட்­டுப்­பட்டு செயற்­பட நாம் விரும்­பு­கின்றோம்.

இலங்­கையின் வரா­லற்றில் எந்த சந்­தர்­பத்­திலும் பெளத்த பிக்­குவின் உரி­மை­யையும் அவர்­மீ­தான மதிப்­பையும் மீறும் வகையில் எந்­த­வொரு சம்­ப­வமும் நடை­பெற்­ற­தில்லை.

ஆனால் இன்று அவை முழு­மை­யாக மீறப்­பட்­டுள்­ளது. இன்று நாட்டை ஆளும் “கறுப்பு வெள்­ளை­யர்கள்” நாட்டின் சுயா­தீன சட்­டத்தை மீறி எமது புனி­தத்­து­வத்தை அவ­ம­திப்­ப­தற்கு ஒப்­பான செயலை செய்­து­விட்­டனர்.

இந்த நாட்டை ஆக்­கி­ர­மித்த மேற்­கத்­தேய வாதி­க­ளிடம் இருந்து இந்த நாட்டை போராடி மீட்­டெ­டுத்­தது இந்த நாட்டில் சிங்­கள பெளத்த கொள்­கையை கட்­டிக்­கா­க­வே­யாகும். அதேபோல் கொம்­யூனிச ஆக்கி­ர­மிப்­பி­லான நாட்டை உரு­வாக்க ஜே.வி.பி யும் தமிழ் ஆக்­கி­ர­மிப்பை உரு­வாக்க விடு­த­லைப்­பு­லி­களும் உரு­வெ­டுத்த போதும் நாட்டை காப்­பாற்ற, மீட்­டெ­டுக்க சிங்­க­ள­வர்கள் முன்­னின்­றனர். இப்­போது முஸ்லிம் ஆக்­கி­ர­மிப்பை மேற்­கொள்ள நடக்கும் முயற்­சி­க­ளையும் எமது சிங்­க­ள­வர்கள் கவ­னத்தில் கொண்டு செயற்­பட்டு வரு­கின்­றனர்.

அதற்குக் காரணம் எம்­மைப்­போன்ற நாட்டை நேசிக்கும் நபர்­களின் துணிவும் சிந்­த­னை­யு­மே­யாகும். நாட்டை நேசிக்கும் எம்­மை­போன்­ற­வர்­களை தண்­டித்து சிறையில் அடைத்து விட்டு உண்­மை­யான பயங்­க­ர­வா­தி­களை சுதந்­தி­ர­மாக வெளியில் நட­மாட விட்­டுள்­ளனர்.

ஒரு பௌத்­த­னாக எனது வேலையை நான் சரி­யாக செய்து வந்­துள்ளேன். நான் அச்­ச­மின்றி நாட்­டுக்­கா­கவும், பௌத்தத்­துக்­க­ாகவும் குரல்­கொ­டுத்து வந்­துள்ளேன். நான் இன்று செய்த தவறு என்ன? நான் நாட்டை பிரிக்க செயற்­பட்­டேனா? இன்­றைய மக்கள் பிர­தி­நி­தி­களை போல ஊழல் மோச­டி­களை செய்து நாட்டை சீர­ழித்­தேனா? அவ்­வாறு எதையும் செய்­யாத என்னை தனிப்­பட்ட வகையில் பழி­வாங்­கி­யி­ருப்­பது ஏற்­றுக்­கொள்­ளவே முடி­யாத ஒரு விட­ய­மாகும்.

நான் நீதி­மன்­றத்தில் கதைத்­தது நீதி­மன்றை அவ­ம­தித்த செய­லென கூறியே என்னை சிறையில் அடைத்­தனர். ஆனால் நான் எனது அமைப்பின் மூல­மாக நாட்டை பிரிப்­ப­தா­கவும், குழப்­ப­காரமான சூழலை உரு­வாக்­கு­வ­தா­கவும் குற்றம் சுமத்தி ஆட்­சி­யா­ளர்கள் என்னை விமர்­சித்து வரு­கின்­றனர்.

சாதா­ரணம் தொடர்பில் நான் கதைத்­த­மையே இன்று குற்­ற­மாக விமர்­சிக்­கப்­பட்­டுள்­ளது. அர­சி­ய­ல­மைப்பு மூலமே தனி மனி­தனின் பேச்சு சுதந்­திரம் மற்றும் கருத்து வெளி­யிடும் சுதந்­திரம் உறு­தி­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. எனினும் இந்த ஆட்­சி­யா­ளர்கள் தமது அதி­கா­ரத்தை தக்­க­வைக்கும் நோக்­கத்தில் பேச்சு சுதந்­தி­ரத்தை தடை செய்து மனி­தர்­களின் கருத்­துக்கு எதி­ராக ஒரு நட­வடிக்­கையை மேற்­கொள்­கின்­றனர்.

அதேபோல் பிரகீத் எக்­னெ­லி­கொ­டவின் மரணம் ஒரு அநி­யாயம் என்­பதை நாம் ஏற்­றுக்­கொள்­கின்றோம். அவர் புலி­களின் உறுப்­பி­னரோ, அல்­லது சர்­வ­தேச நாடு­க­ளுக்கு துணை­போ­ன­வரோ எவ­ராக இருந்­தாலும் அவரை கொலை செய்ய எவ­ருக்கும் உரிமை இல்லை. ஆனால் எமக்கு இருக்கும் கேள்வி என்­ன­வெனில் பிரகீத்தின் மர­ணத்­துக்கு கொடுக்கும் முக்­கி­யத்­துவம் ஏன் ரோகன விஜ­ய­வீர, காமினி திசா­நா­யக போன்­ற­வர்கள் கொல்­லப்­பட்­டமைக்கும், பல அப்­பா­விகள் கொல்­லப்­பட்­ட­மைக்கும் கொடுக்கப்படவில்லை.

அதேபோல் ஹிருணிக்கா போன்­ற­வர்கள் சட்­டத்தில் கட்­டுப்­ப­டாத நிலையில் எம்­மைப்­போன்­ற­வர்கள் மட்டும் தண்­டிக்­க­ப்ப­டு­வது ஏன். இந்த மாதிரியொரு நல்லாட்சி தொடர்ந்தால் நாட்டில் அப்பாவிகள் மாத்திரம் தண்டிக்கப்பட்டு வருவார்கள். இப்போதாவது பெளத்த உரிமைகளை பாதுகாக்க வேண்டும், பிக்குகளின் உரிமைகளை பாதுகாக்கக் வேண்டும்.

இப்போதும் நான் சட்டத்தின் மீதும் சுயாதீனத்தின் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளேன். எமது பெளத்த சிங்கள தேசம் கட்டிக்காக்கப்பட வேண்டும். அந்த நம்பிக்கையில் நான் இருக்கின்றேன் என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags :
comments