கைது செய்வதனால், ராஜபக்ஷவினரின் பயணத்தை தடுக்கமுடியாது – மஹிந்த ஆவேசம்

  • January 30, 2016
  • 470
  • Aroos Samsudeen

Image title

கைது செய்வதனால் ராஜபக்ஷவினரின் பயணத்தை ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது மகன் யோஷித ராஜபக்ஷவின் கைது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சி.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் யோஷித ராஜபக்ஷ இன்று நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சற்று முன்னர் மஹிந்த ராஜபக்ஷவும் கடுவலை நீதவான் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்.

ஏற்கனவே யோஷித ராஜபக்‌ஷவின் தயார் சிரந்தி ராஜபக்ஷ, அவருடைய சகோதார் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கோதாபய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ ஆகியோர் நீதிமன்றுக்கு சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags :
comments