ஜனநாயகக் கட்சி, ஐ.தே.மு.வுடன் இணையும்

  • January 31, 2016
  • 467
  • Aroos Samsudeen

Image title

எதிர்வரும் வாரம், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் தலைமையில் உள்ள ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டு அமைச்சு பதவியொன்று வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மறைந்த, காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தனவின் வெற்றிடத்துக்கு, ஜனநாயகக் கட்சியின் தலைவரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பித்தக்கதாகும்.

Tags :
comments