அம்பாறை பிராந்திய ஈமானிய எழுச்சி மாநாடு

  • February 1, 2016
  • 708
  • Aroos Samsudeen

Image title

(றிசாத் ஏ காதர்)

றாபிதது அஹ்லிஸ்ஸூன்னா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட அம்பாரை பிராந்திய ஈமானிய எழுச்சி மாநாடு நேற்று (2016.01.30) சனிக்கிழமை மருதமுனை மஸ்ஜிதுல் அக்பர் பள்ளிவாசலில் அமைப்பின் அம்பாரை பிராந்திய செயலாளர் அஷ்ஷேஹ் றியாழ் (காசிபி) தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அல்குர்ஆனையும் அல்-ஹதீஸையும் புரிந்துகொள்வது எப்படி என்கின்ற தலைப்பில் இவ் அமைப்பின் தலைவரும் கொழும்பு பல்கலைக்கழக சுதேச மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான டாக்டர் அஷ்ஷேஹ் ரயிஸூத்தீன் (ஸரயி) உரை நிகழ்த்தியதோடு, சீதனமும் அதை ஒழிப்பதற்கான வழிவகைகளும் என்ற தலைப்பில் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதியாவின் பணிப்பாளர் அஷ்ஷேஹ் அபூபக்கர் சித்தீக் (மதனி) உரையாற்றினார்.

மேலும் இந் நிகழ்வின் கருப்பொருளான ஈமானிய எழுச்சி என்ற தலைப்பில் தாருல் ஹ_தா பெண்கள் அரபுக்கல்லூரியின் அதிபர் அஷ்ஷேஹ் கலாநிதி முபாறக் மதனி சொற்பொழிவாற்றியதுடன். இல்லற வாழ்வு நல்லறமாக அமைய என்ற தலைப்பில் தாருல் ஹ_தா பெண்கள் அரபுக்கல்லூரியின் விரிவுரையாளர் இத்ரீஸ் ஹசன் (ஸஹ்வி), பிழையாக புரிந்துகொள்ளப்படும் தவ்ஹீத் கலிமா என்கின்ற தலைப்பில் அஷ்ஷேஹ் மன்சூர் மதனி ஆகியோர் உரை நிகழ்த்தியதோடு பெருந்திரளான மக்கள் இந் நிகழ்வில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.

Image title

Image title

Image title

Image title

Image title

Image title

Tags :
comments