கிழக்கு மாகான கராத்தே சம்மேளனத்தின் தலைவராக சாய்தமருது இக்பால் தெரிவு

  • February 1, 2016
  • 530
  • Aroos Samsudeen

Image title

(சப்னி)

கிழக்கு மாகான கராத்தே சம்மேளன நிருவாக சபையினை தெரிவும் அதற்கான வாக்கெடுப்பும் கல்முனை வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நேற்று (31) நடைபெற்றது.

நிகழ்கால தலைவராக பதவி வகித்த சாய்ந்தமருதை சேர்ந்த இக்பால் ஆசிரியர் மீண்டும் தலைவர் பதவிக்காக போட்டியிட்டு அதில் அவரை எதிர்த்து போட்டியிட்டவரைவிட அதி கூடிய வாக்குகள் வித்தியாசத்தில் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை, மட்டக்களப்பு, திரிகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியதுதான் கிழக்குமாகான கராத்தே சம்மேளனம்.

ஸ்ரீ லங்கா கராத்தே சம்மேளனமானது நாட்டின் ஒன்பது மாகானங்களையும் ஒன்றினைத்ததாகும். இது விளையாட்டுத்துறை அமைச்சின்கீழ் செயல்படுகின்றது. அத்துடன் உலக கராத்தே சம்மேளனத்துடனும், ஆசிய கராத்தே சம்மேளனத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
comments