1 பில்லியன் பாவனையாளர்களைக் கடந்த ஜிமெயில்

  • February 3, 2016
  • 695
  • Aroos Samsudeen

Image title

தினந்தோறும் நாம் பயன்படுத்தும் ஒரு சாதாரண விஷயமாக மாறிவிட்டது ஜி மெயில். மின்னஞ்சல் சேவை வழங்கும் மற்ற நிறுவனங்கள் கூகுளின் ஜி மெயிலுக்கு அருகில் கூட வர முடியாத அளவிற்கு முன்னணியில் உள்ளது ஜி மெயில்.

இந்நிலையில் கூகுளின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தனது நிறுவன பங்குதாரர்களிடமும், செய்தியாளர்களிடம் பகிர்ந்துக்கொண்டுள்ள செய்தியில் ஜி மெயிலை பயன்படுத்தும் பயனார்களின் எண்ணிகை கடந்த மே மாதம் 900 மில்லியனாக இருந்தது. கடைசி காலாண்டில் இந்த எண்ணிக்கை 1 பில்லியனை கடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஜி மெயிலின் சேவையை மேம்படுத்த தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். 2013 ஆம் ஆண்டு வெளியிலான கணக்குபடி ஜி மெயிலின் போட்டி நிறுவனமான அவுட்லூக் 420 மில்லியன் பயனாளர்களை பெற்றுள்ளது. யாகூ 2012 ஆம் ஆண்டு வெளியிட்ட தகவல்படி 280 மில்லியன் பேர் யாகூ மெயிலை பயன்படுத்துகிறார்கள்.

Tags :
comments