தெற்காசிய விளையாட்டு விழா இன்று ஆரம்பம் தீபம் ஏற்றும் பாக்கியம் பைச்சுங் பூட்டியாவுக்கு

  • February 5, 2016
  • 586
  • Aroos Samsudeen

Image title

தெற்­கா­சிய நாடு­களைச் சேர்ந்த விளை­யாட்டு வீர, வீராங்­க­னை­களின் ஆற்­றல்­களைப் பரீட்­சிக்கும் பல்­வகை விளை­யாட்டுப் போட்­டி­களை உள்­ள­டக்­கிய தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவின் 12ஆவது அத்­தி­யாயம் இந்­தி­யாவின் குவா­ஹாட்­டியில் இன்று கோலா­கல தொடக்க விழா வைப­வத்­துடன் ஆரம்­ப­மா­கின்­றது.

ஆப்­கா­னிஸ்தான், பங்­க­ளாதேஷ், பூட்டான், மாலை­தீ­வுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, விழாவை நடத்தும் வர­வேற்பு நாடான இந்­தியா ஆகிய நாடு­களைச் சேர்ந்த சுமார் 2,600 விளை­யாட்டு வீர, வீராங்­க­னைகள் 23 வகை­யான விளை­யாட்டுப் போட்­டி­களில் பங்­கு­பற்­ற­வுள்­ள­தா­கவும் சுமார் 900 அதி­கா­ரிகள் பங்­கு­பற்­ற­வுள்­ள­தா­கவும் தெற்­கா­சிய விளை­யாட்டு விழா­வுக்­கான உத்­தி­யோ­க­பூர்வ பேச்­சாளர் டி. ஜே. நராயண் தெரி­வித்தார்.

இவ்விளை­யாட்டு விழா­வுக்­கான ஆரம்ப விழா மற்றும் ஏற்­பா­டுகள் குறித்து நரா­ய­ணுடன் வாயி­லாக ‘மெட்ரோ ஸ்போர்ட்ஸ்’ தொடர்­பு­கொண்டு கேட்­ட­போதே அவர் இத் தக­வலை வெளி­யிட்டார்.

இவ் விளை­யாட்டு விழா இந்­திய பிர­தமர் நரேந்திர மோடி­யினால் சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மாக ஆரம்­பித்து வை­கப்­படும் எனவும் ஆரம்ப விழாவில் ர­சி­கர்­களைப் பர­வ­சத்தில் ஆழ்த்­தக்­கூ­டிய பல அற்­புத நிகழ்ச்­சிகள் நடை­பெ­ற­வுள்­ளது.

Image title

எனவும் தெரி­வித்த அவர், அவை வியத்­தகு நிகழ்ச்­சிகள் என்­பதால் அவற்றை முன்­கூட்­டியே வெளி­யிட விரும்­ப­வில்லை என்றார்.

ஆரம்ப விழா வைபவம் குவா­ஹாட்டி, இந்­திரா காந்தி சர்­வ­தேச விளை­யாட்­ட­ரங்கில் இன்று பிற்­பகல் நடை­பெ­ற­வுள்­ள­துடன் முடிவு விழாவும் இதே அரங்கில் பெப்­­ர­வரி 16ஆம் திகதி மாலை நடை­பெ­ற­வுள்­ளது.

ஆரம்ப விழாவில் பங்­கு­பற்றும் நாடு­களின் அணி­வ­குப்பு, விளை­யாட்டு விழா கொடி ஏற்றல் என்­ப­வற்­றுடன் சம்­பி­ர­தா­ய­பூர்வ பல நிகழ்­வுகள் நடை­பெ­ற­வுள்­ளன. விளை­யாட்டு விழா தீபத்தை இந்­தி­யாவின் முன்னாள் கால்­பந்­தாட்ட நட்­சத்­திரம் பைச்சுங் பூட்­டியா ஏற்­றி­வைப்பார்.

இவ் விளை­யாட்டு விழா நடை­பெறும் குவா­ஹாட்­டி­யிலும் ஷில்­லொங்­கிலும் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

நட்­பு­றவைப் பலப்­ப­டுத்தும் விளை­யாட்டு விழா

தெற்­கா­சிய நாடு­க­ளுக்கு இடையில் நல்­லு­றவை பலப்­ப­டுத்தும் வண்­ணமும் பிராந்­தி­யத்தில் விளை­யாட்­டுத்­துறை ஆர்­வத்தை ஏற்­ப­டுத்தும் வண்­ணமும் தெற்­கா­சிய சம்­மே­ளன விளை­யாட்டு விழா முதன் முதலில் நேபா­ளத்தின் தலை­ந­க­ரான காத்­மண்­டுவில் 1984இல் அரங்­கேற்­றப்­பட்­டது.

இதனைத் தொடர்ந்து சில சந்­தர்ப்­பங்­களைத் தவிர, இரண்டு வரு­டங்­க­ளுக்கு ஒரு­முறை இவ் விளை­யாட்டு விழா நடத்­தப்­பட்டு வரு­கின்­றது. ஆரம்­பத்தில் தெற்­கா­சிய சம்­மே­ளன விளை­யாட்டு விழா என்ற பெயரில் நடத்­தப்­பட்­டு­வந்த இவ் விழா தற்­போது தெற்­கா­சிய விளை­யாட்டு விழா என அழைக்­கப்­ப­டு­கின்­றது.

ஐந்து நாடு­க­ளி­லேயே விழா அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளது

தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவில் எட்டு நாடுகள் பங்­கு­பற்­று­கின்­ற­போதிலும் விழாவை ஐந்து நாடு­களே நடத்­தி­யுள்­ளன.

நேபாளம் (கத்­மண்டு 1984, 1999), பங்­க­ளாதேஷ் (டாக்கா 1985, 1993, 2010), இந்­தியா (கல்­கத்தா 1987, சென்னை 1995), பாகிஸ்தான் (இஸ்­லா­மாபாத் 1989, 2004), இலங்கை (கொழும்பு 1991, 2006) ஆகிய நாடுகள் இதற்கு முன்­ன­ரான விழாக்­களை அரங்­கேற்­றி­யி­ருந்­தன.

பங்­க­ளா­தே­ஷுக்குப் பின்னர் தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவை மூன்­றா­வது தட­வை­யாக நடத்தும் இரண்­டா­வது நாடாக இந்­தியா விளங்­கு­கின்­றது.

1984 முதல் 2010 வரை நிறை­வு­பெற்­றுள்ள 11 அத்­தி­யா­யங்­க­ளிலும் ஒட்­டு­மொத்த சம்­பியன் பட்­டத்தை (தங்கப் பதக்­கங்கள் அடிப்­ப­டையில்) இந்­தி­யாவே வென்று வந்­துள்­ளது.

பாகிஸ்தான் 7 தட­வை­களும், இலங்கை 3 தட­வை­களும் நேபாளம் ஒரு தட­வையும் இரண்டாம் இடத்தைப் பெற்­றி­ருந்­தன.

விழா நடை­பெறும் இடங்கள் குவா­ஹாட்டி, ஷில்லொங்

12ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழா அசாம் மாநி­லத்தின் குவா­ஹாட்­டி­யிலும் மேகா­லயா (மேகங்­களின் இருப்­பிடம்) மாநி­லத்தின் மலைப்­பாங்­கான ஷில்­லொங்­கிலும் நடை­பெ­ற­வுள்­ளது.

Image title

குவா­ஹாட்­டியில் ஒன்­பது அரங்­கு­களில் மெய்­வல்­லுநர், கூடைப்­பந்­தாட்டம், சைக்­கி­ளோட்டம், கால்­பந்­தாட்டம், கைப்­பந்­தாட்டம், ஹாக்கி, கபடி, கோ கோ, குறி­பார்த்து சுடுதல், ஸ்கொஷ் (சுவர் பந்­தாட்டம்), நீச்சல், டென்னிஸ், ட்ரைஎத்லன் (மூவம்ச விளை­யாட்டு), கரப்­பந்­தாட்டம், பளு தூக்­குதல், மல்­யுத்தம்ஆகிய16வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இவற்றில் கால்பந்தாட்டம் (ஆண்கள்) தவிர்ந்த மற்றைய போட்டிகள் அனைத்தும் இருபாலாருக்குமானவை.

ஷில்லொங்கில் நான்கு அரங்குகளில் வாட்போர், பட்மின்டன், குத்துச்சண்டை, கால்பந்தாட்டம், ஜூடோ, மேசை ப்பந்தாட்டம், டய்க்வொண்டோ, வூஷு ஆகிய எட்டு வகையான விளையாட்டுகள் நடைபெறும். இவற்றில் கால்பந்தாட்டம் (பெண்கள்) தவிர்ந்த மற்றைய போட்டிகள் இருபாலாருக்குமானவை.

Image title

Tags :
comments