கடந்த மாதத்திற்குள் பேஸ்புக் தொடர்பில் 220 முறைப்பாடுகள் பதிவு

  • February 6, 2016
  • 721
  • Aroos Samsudeen

Image title

கடந்த மாதத்திற்குள் பேஸ்புக் தொடர்பிலான 220 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கைப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவற்றுள் போலிக் கணக்குகள் தொடர்பாகவே அதிக எண்ணிக்கையான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த குறிப்பிட்டுள்ளார்.

சமூக இணையத்தளங்களில் தங்களின் பெயர்களில் வேறு நபர்கள் போலிக் கணக்குகளை உருவாக்கியுள்ளமை குறித்து முறைப்பாடுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஏனையோர் தங்களின் பெயர் மற்றும் நிழற்படங்களை பயன்படுத்தி போலிக் கணக்குகளை உருவாக்குவதற்கு ஏதுவாக சமூக இணையத்தளங்களில் அறிமுகமில்லாதவர்களுக்கு உண்மையான விபரங்களை வழங்காதிருப்பது உகந்ததென கணனி அவசர நடவடிக்கைப் பிரிவின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் தெரிவித்தார்.

அத்துடன் தங்களின் பெயர் விபரங்களுடன் போலிக் கணக்குகள் உருவாக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அதுகுறித்து அந்தந்த சமூக இணையத்தளங்களில் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Tags :
comments