வ‌ட்ஸ் அப் குருப்பில் இனி 256 பேர் உறுப்பினராகலாம்!

  • February 6, 2016
  • 756
  • Aroos Samsudeen

Image title

வ‌ட்ஸ் அப் குரூப்பில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை 100 லிருந்து 256 ஆக உயர்த்தப்பட்டிருப்பது வ‌ட்ஸ் அப் பயனாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் பெரும்பாலானோர் தங்கள் நண்பர்களுடன் தொடர்ந்து ஒன்லைனில் இணைந்திருக்க வ‌ட்ஸ் அப் குரூப் வசதியை பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் வ‌ட்ஸ் அப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டியுள்ளதாக சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

அதேசமயம் ஆண்டு சந்தா விதிக்கப்பட்ட இந்த அப்ளிகேஷனை இனி இலவசமாக பயன்படுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வ‌ட்ஸ் குரூப்பில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை 100 லிருந்து 256 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தொடக்கத்தில் ஒரு வ‌ட்ஸ் அப் குரூப்பில் அதிகபட்சமாக 50 உறுப்பினர்கள் வரை சேர்த்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்து வந்தது. பிறகு, 2014 நவம்பரில் இந்த எண்ணிக்கை 100-ஆக உயர்த்தியது வ‌ட்ஸ் அப்.

தற்போது, அந்த எண்ணிக்கை 256-ஆக உயர்த்தியுள்ளது வ‌ட்ஸ் அப். ஆனால், இந்த புதிய வசதி சோதனை அடிப்படையில் உள்ளதால், அனைத்து பயனர்களும் பெற முடியாது. ஆன்ட்ராய்டு செல்பேசியில் இந்த புதிய பதிப்பை நேரடியாக பயன்படுத்த https://www.whatsapp.com/android/current/WhatsApp.apk என்ற முகவரிக்கு சென்று நேரடியாக பதிவிறக்கி நிறுவிக்கொள்ளலாம். இந்த புதிய வசதி ஆன்ட்ராய்டு வெர்ஷனில் மட்டுமே வெளிவந்துள்ளது. விண்டோஸ், பிளாக்பெர்ரி உள்ளிட்ட செல்பேசிகளுக்கு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
comments