மெய்வல்லுனர் போட்டி பயிற்சியில் மாணவி உயிரிழப்பு

  • February 7, 2016
  • 387
  • Aroos Samsudeen

Image title

(செல்வநாயகம் கபிலன்)

பாடசாலை இல்ல மெய்வல்லுனர் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மாணவி, திடீரென்று மயங்கி விழுந்த பின்னர், வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்துள்ளதாக, பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

குடத்தனை பகுதியைச் சேர்ந்த யோகலிங்கம் அனோஜா (வயது 13) என்ற மாணவியே இவ்வாறு நேற்று சனிக்கிழமை (06) உயிரிழந்துள்ளார்.

சக மாணவிகளுடன் அஞ்சல் ஒட்டப்போட்டிக்கு தனது இல்லம் சார்பாக ஓடுவதற்கு பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த மாணவி, திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு, முதலுதவிகள் வழங்கப்பட்ட பின்னர், சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில், பாடசாலை அதிகாரிகள் அனுமதித்துள்ளனர்.

எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Tags :
comments