16 பேர் இருந்தும், ஒரே ஒரு இலங்கை வீரர் மட்டுமே ஏலம் போன பரிதாபம்!

  • February 7, 2016
  • 1951
  • Aroos Samsudeen

Image title

9வது ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் ஒரே ஒரு இலங்கை வீரர் மட்டுமே விலை போயுள்ளார். மற்ற 15 பேரையும் சீந்தக் கூட ஆள் இல்லை.

திசர பெரேரா மட்டுமே ரூ. 1 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். மற்ற பிரபலங்கள் உள்ளிட்ட யாரையும் எந்த அணியும் விலை கொடுத்து வாங்க முன்வரவில்லை.

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு இது பெருத்த அவமானம் என்பதில் சந்தேகம் இல்லை. மகேல‌ ஜெயவர்த்தனவைக் கூட யாரும் வாங்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் வீரர்கள் ஏலம் நேற்று பெங்களூரில் நடந்தது. அதில் பல முன்ணி வீரர்களை யாரும் ஏலம் எடுக்காத அவல நிலை ஏற்பட்டது.

இந்த ஏலத்தில் இலங்கையைச் சேர்ந்த 16 வீரர்களின் பெயர்களும் இடம் பெற்றிருந்தது. திசர பெரேரா, மகேல‌ ஜெயவர்த்தன‌, லஹிரு திரிமன்னே, நுவன் குலசேகர, அஜந்த மெண்டிஸ், சசித்ர சேனநாயக, துஷ்மந்த சமீர, டிஎம். தில்ஷன், ஜீவன் மெண்டிஸ், தில்ருவன் பெரரா, ஷேஹன் ஜெயசூர்ய, தாசன் சனக, மிலிந்த சிரவர்தன, இசுரு உதன, தில்ஷன் முனவீர, சீகுகே பிரசன்ன ஆகியோரே அவர்கள்.

இதில் திசரவை மட்டும் டோணி தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ரூ. 1 கோடிக்கு ஏலத்தில் ஏடுத்தது.

மற்ற 15 வீரர்களையும் யாரும் எடுக்க முன்வரவில்லை. இதனால் இந்த 15 பேரும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Tags :
comments